காணக்கூடாததை நோக்கிப் பார்த்தல் LOOKING AT THE UNSEEN லாஸ் ஏஞ்சலிஸ், கலிபோர்னியா USA 59-04-10 1. நாம் நமது தலைகளைத் தாழ்த்துகையில் ஜெபத்திற்காக சிறிது நிற்போமாக. 2. சர்வ வல்லமையுள்ள தேவனே, வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தவரே, நித்திய ஜீவனின் ஆக்கியோனே, ஒவ்வொரு அருமையான மற்றும் பரிபூரணமான வரத்தை அளிப்பவரே, ஓ கர்த்தாவே, நாங்கள் உம்மிடமாக ஒப்புரவாகத் தக்கதாக எங்களுடைய ஆறுதலுக்காக மூன்றாம் நாளிலே உம்முடைய குமாரனாகிய இயேசுவை உயிரோடெழுப்பினவரே, இந்த காரியத்தை விசுவாசிப்பதினாலே விசுவாசத்தினால் நீதிமானாக்கப்பட்டவர்களாக; இன்றிரவு நீர் தாமே உம்முடைய பிள்ளைகளாகிய எங்களை உம்முடைய நித்திய பிரசன்னத்தின் மிக உயரிய உன்னதங்களுக்கும் மற்றும் அதிக ஆழங்களுக்கும் எழுப்பவேண்டுமாய் ஜெபிக்கின்றோம். கர்த்தாவே, நாங்கள் தாமே உம்மை அடையாளங்கண்டு கொள்ளட்டும். இன்றிரவு தாமே விசுவாசமானது வரட்டும், பழங்கால பாணி பெந்தெகொஸ்தெ அக்கினிக்கு எங்கள் இருதயங்களை அது கொழுந்து விட்டு எரியச் செய்யட்டும்.  3. கர்த்தாவே, இன்றிரவு பலவீனமானவர்களையும், பலவீனமான கால்களையுடையவர்களையும், பலவீனமான கைகளையுடையவர்களையும் நினைவில் கொள்ளும். அவர்கள் தாமே உம்முடைய ஆவியின் பிரசன்னத்தினாலே இன்றிரவு பலப்படுத்தப்படவேண்டுமென்று நாங்கள் ஜெபிக்கின்றோம்., அலைந்து திரிகிறவர்களை மறுபடியுமாக மந்தைக்குள்ளாக திருப்பிக் கொண்டு வாரும். மேலும் உம்மை தங்கள் சொந்த இரட்சகராக இன்னுமாக ஏற்றுக்கொள்ளாதிருக்கின்ற மற்ற எல்லாருக்கும் இன்றிரவு தாமே உம்மை முழுவதுமாக ஏற்றுக்கொள்ளும்படிக்குச் செய்யும் ஒன்றாக இருப்பதாக. அதன் பிறகு, கர்த்தாவே, வியாதிப்பட்டவர்கள், துன்பப் படுவோர்கள் மற்றும் மிகவுமாக தேவைகள் உள்ளவர்களை நினைவில் கொள்ளும். அவர்கள் தாமே ஒரு புதிய ஆரோக்கியத்திற்கும், புதிய நம்பிக்கைக்கும், புதிய விசுவாசத்திற்கும் இன்றிரவு எழுப்பப்படுவார்களாக. கர்த்தாவே, இதை அருளும். நாங்கள் காத்துக் கொண்டிருக் கையில் நீர் தாமே உம்முடைய வார்த்தையைக் கொண்டு எங்களிடம் பேசும். உம்முடைய குமாரனாகிய இயேசுவின் நாமத்தில் இதை நாங்கள் கேட்கின்றோம். ஆமென். நீங்கள் உட்காரலாம்.  4. ஒவ்வொரு இரவும் கர்த்தருடைய வீட்டிற்கு வருவதென்பது மிகவும் அருமையான ஒன்றாக இருக்கின்றது. மீட்கப்பட்ட எல்லாருடனும் பரலோகத்தில் இருப்பது என்பதும் மற்றும் ஏற்கனவே மீட்கப்பட்டு தங்களை ஏற்றுக் கொள்வதற்காக வருகின்ற தங்கள் கர்த்தருக்கு காத்திருக்கின்றவர்களோடு இருப்பதை விட இன்றிரவு நான் செல்லத்தக்கதாக இருக்கின்ற வேறு எந்த ஒரு இடமும் எனக்குத் தெரியாது. ஆகவே நாங்கள் அங்கே இப்பொழுது இல்லாமல் அங்கே செல்வதற்கு ஆயத்தமாக இருக்கின்றவர்களோடு நாங்கள் இருக்கின்றோம். அவர்களில் ஒருவன் என்றழைக்கப் படுவது சந்தோஷமான ஒரு காரியமே. 2 கொரி. 4 : 18.  5. இன்றிரவு II கொரிந்தியர் நான்காம் அதிகாரம், பதினெட்டாம் வசனத்திலிருந்து (தமிழ் வேதாகமத்தில் 17-ம் வசனம் - தமிழாக்கியோன்) ஒரு வசனத்தை நான் வாசிக்க விரும்புகிறேன். மேலும் காணப்படுகிறவைகளையல்ல, காணப்படாதவைகளை நோக்கியிருக்கிற நமக்கு .....  6. ஆகவே இன்றிரவிற்கான நம்முடைய பொருள் "காணப்படாதவைகளை நோக்கிப் பார்த்தல்” என்பதேயாகும். தமக்கு ஒரு உள்ளான மனிதன் ஒருவனும் மற்றும் ஒரு வெளிப்புற மனிதனும் இருக்கிறாள் என்று கூறப்பட்டுள்ளது. வெளிப்புற மனிதன் தன்னுடைய கண்களைக் கொண்டு காண்கின்றான். உள்ளான மனிதனோ விசுவாசத்தினாலே நடக்கின்றான். ஆகவே இந்த இரு நபர்களில் ஒருவராலே நாம் வழி நடத்தப்பட வேண்டியவர்களாக இருக்கின்றோம். வெளிப்புறம், வெளிப்புற மனிதன் என்பது சுயம் ஆகும் ; உள்ளான மனிதன் தேவன் ஆகும். பெரும்பாலான சமயங்களில் நாம் நம்முடைய கண்களால் காண்கிறோம் என்று நாம் நினைப்பதுண்டு. ஆனால் நாம் நம்முடைய கண்களால் காண்பதில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். நாம் நம்முடைய கண்களால் உற்று நோக்குகின்றோம் ; நம்முடைய இருதயத்தைக் கொண்டு காண்கின்றோம். யோவான் 3 : 5  7. ஒரு முறை இயேசு நிக்கொதேமுவிடம் “ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான்" என்று கூறினார். வேறு விதமாகக் கூறுவோமானால் : நீ மறுபடியும் பிறக்கின்ற வரைக்கும் தேவனுடைய ராஜ்யத்தை உன்னால் புரிந்து கொள்ள முடியாது, என்ற விதத்தில்தான் இயேசு கூறினார். ஆகவே அதை ஏற்றுக்கொள்ள முதலாவதாக நீங்கள் ஒரு முயற்சியை எடுக்க வேண்டும். அதை நீங்கள் ஏற்றுக்கொண்ட பிறகு, அப்பொழுது உங்களால் அதைப் புரிந்து கொள்ள முடிகின்றது.  8. நான் சிறு பையனாக இருக்கையில் இவ்விதம் நான் கூறுவதுண்டு, இங்கே அதை பிரசங்க மேடையில் கூறுவதென்பது ஏறக்குறைய புனிதத்தன்மையை அவமதிப்பு செய்வது போலக் காணப்பட ஏதுவுண்டு . . . நாங்கள் கொடி தூக்கி என்னும் விளையாட்டை விளையாடுவதுண்டு. அங்கே இருந்த ஒரு சிறு தண்ணீ ர்த் தேக்கங்களில் (Swimming hole) நாங்கள் நீந்தச் செல்வதுண்டு. கிராமங்களில் பிறந்து வளர்ந்த சிறு பையன்கள் எத்தனைப் பேருக்கு அந்தத் தண்ணீர்த் தேக்கங்களைக் குறித்துத் தெரியும். வேலை சமயத்தில் சில நிமிடங்கள் எங்களுக்குக் கிடைத்தால் அல்லது நாங்கள் நாள் முழுவதுமாக வைக்கோலை அடித்துக் கட்டி முடித்து விட்ட பிறகு நேராக அந்த தண்ணீர்த் தேக்கத்திற்கு நீச்சலடிக்க ஓடுவோம்.  9. நான் வழக்கமாக சென்ற இந்த தண்ணீர் தேக்கத்தில் ஒரு பெரிய கரை இருந்தது. அப்பொழுது எங்களுக்கு ஒரு கொடி தூக்குபவன் அவசியமாயிருந்தது. அவன் தான் வழி நடத்திச் செல்ல வேண்டும். அவன் செய்ய வேண்டிய பணியானது மிகவும் பெரிதான ஒன்றாக இருந்தது. ஆகவே, இந்த பையன்கள் எல்லாரும் தண்ணீருக்கு அருகே செல்கையில் ..... சில சமயங்களில் இலையுதிர்க்காலமானது சற்று தாமதமாக முடியும். அப்பொழுது இந்த நீரோடைகளில் ஆரம்ப இடத்தில் நீரூற்று பொங்கிக்கொண்டிருக்கும். அப்பொழுது சில சமயங்களில் தண்ணீர் மிகவும் சில்லென்று குளிர்ந்து இருக்கும். ஆகவே நாங்கள் எங்களால் முடிந்தவரைக்கும் மிக வேகமாக தண்ணீரை நோக்கி ஓடுவோம். தண்ணீரில் கடைசியாக குதிப்பவன் தான் கொடி தூக்கியாக இருக்க வேண்டும். நல்லது, நான் ஒரு போதும் கொடி தூக்கியாக இருந்ததேயில்லை. ஏனென்றால் வழக்கமாக நான் தான் முதலில் தண்ணீரில் இறங்குவேன். மற்றவர்கள் தங்கள் மேல் சட்டையை கழற்றி கொடியாக ஆட்டவோ அல்லது கால்சட்டை விழாது பிடித்திருக்கும் நாடாக்களில் சிலவற்றை கழற்ற வேண்டி யிருக்கும். ஆனால் வழக்கமாக நானோ ஒரு ஜோடி மேலாடைகளை அணிந்து ஒரு சிறு நூலை அதற்கு மேலாக செலுத்தி ஒரு ஆணியை பொத்தானாக வைத்து இணைத் திருப்பேன். அதை நீங்கள் அணிந்திருப்பீர்களா இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை. நான் செய்ய வேண்டிய ஒரே காரியம் என்னவென்றால் அந்த ஆணியைப் பிடுங்கும் போது என்னுடைய தளர்ந்திருக்கும் மேலாடைகள் காற்றில் அப்படியே தூக்கிக்கொண்டு நிற்கும். அப்பொழுது நான் தண்ணீருக்குள் இருப்பேன். 10. தண்ணீர் குளிர்ந்து போய் உள்ளதா அல்லது வெப்பமாக உள்ளதா என்று நான் ஒரு அடையாளத்தைக் காண்பிக்க அவர்கள் என்னைத் தான் நோக்கிப் பார்ப்பார்கள். இப்பொழுது, நான் ஒரு விரலை உயர்த்திக் காண்பித்தால் தண்ணீர் குளிர்ந்த நிலையில் உள்ளதென்று அர்த்தம், “பையன் களே சற்று ஜாக்கிரதையாக தண்ணீருக்குள் இறங்குங்கள்”, என்பேன். ஆனால் நான் என் இரண்டு விரல்களை உயர்த்தினால் தண்ணீர் வெப்பமாக உள்ளதென்று அர்த்தம். நான் ஒரு சாட்சியாக இருந்தேன் ; ஏனென்றால் நான் ஏற்கனவே அதை சோதித்தறிந்து விட்டேன். ஆகவே இப்பொழுதும் கூட இங்கே இன்றிரவு மறுபடியும் பிறவாதவர்கள் ஒருக்கால் இருப்பார்களாயின் உள்ளே வாருங்கள் - தண்ணீர் அருமையாக இருக்கின்றது. நான் ஏற்கனவே அதை கண்டு சோதித்தறிந்து சாட்சி கூறுகிறேன். நீதிமொழிகள் 23 : 7  11. "அவன் இருதயத்தின் நினைவு எப்படியோ, அப்படியே அவன் இருக்கிறான்” என்று தேவன் கூறிய போது, நிச்சயமாக அவர் தவறு செய்து விட்டார் என்று சில விமர்சகர்கள் சில காலத்திற்கு முன்னர் கூறுவதுண்டு. பிறகு தேவன் சரியாகத் தான் கூறியுள்ளார் என்று பின்னர் அறிந்து கொண்டனர். ஒரு மனிதனுக்கு அவனுடைய இருதயத்தில் மனோசக்தி புலன்கள் இல்லை என்று கூறினர், ஆகவே ஒருக்கால் தேவன் “அவன் இருதயத்தின் நினைவு” என்று கூறுகையில் “அவனுடைய தலையை” தான் குறிப்பிட்டார் என்று கூறினர். ஆகவே தேவன் எந்த ஒரு தவறையும் செய்வதில்லை. அவனுடைய இருதயம் என்று அவர் கூறினபோது அவனுடைய இருதயத்தைத் தான் குறிப்பிட்டார். அவரால் கூறப்பட்டுள்ள எல்லாகாரியங்களும் பரிபூரணமானவைகள், அவரால் கூறப்பட்டவைகளுக்கு மறு ஆய்வு என்பது தேவையேயில்லை. தேவன் கூறியுள்ள படியே தான் அவை இருக்கின்றன. அவை வேறொரு சபை காலத்துக்கோ அல்லது வேறொரு சமயத்திற்கு அல்ல. ஆனால் எல்லா காலங்களிலும் இருப்பவர்களுக்குக்குரியதான ஒன்றாகும். ஏனெனில் தேவனுடைய வார்த்தையானது பரிபூரணமானதும், என்றென்றைக்குமுள்ளதும், நித்தியமுமான ஒன்றாகும், ஏனென்றால் அவர் நித்தியமானவர்.  12. ஆகவே, ஒரு மனிதனின் இருதயத்தின் ஒரு பகுதியில் ஒரு சிறு இடம் இருக்கின்றதென்றும் அந்த சிறு இடத்தில் ஒரு அணுவும் கூட இல்லை என்றும் சுமார் நான்கு வருடங்களுக்கு முன்னர் சிக்காகோவில் ஒரு செய்தித்தாளின் தலைப்புகளில் நான் வாசித்துக் கொண்டிருந்தேன். அந்த விதமான ஒன்று மிருகங்களில் இருக்கவில்லை ; அது மனித சரீரத்தில், மனிதனுடைய இருதயத்தில் தான் இருக்கின்றது. அந்த இடமானது ஆத்துமா வாசம் செய்கின்ற இடமாக இருக்கலாம் என்று அவர்கள் கூறினர். ஆகவே தான் ஒரு மனிதன் தன் இருதயத்துடன் சிந்திக்கின்றான். நீங்கள் உங்கள் கண்களால் உற்று நோக்குகிறீர்கள். ஆனால் இருதயத்தைக் கொண்டு சிந்திக்கின்றீர்கள்.  13. தேவன் மனிதனை உண்டாக்கின போது, இந்த காரணத்திற்குத் தான் உண்டாக்கினார் ; ஒரு மனிதனுக்குள்ளாக இந்த குறிப்பிட்ட சிறு இடத்தை தம்முடைய சொந்த சிங்காசனத்தை வைக்க, தம்முடைய கட்டுப்பாட்டு கோபுரத்தை வைக்கத்தான் அவர் உண்டாக்கினார். மனிதனை வழிநடத்த தேவன் விரும்புகின்றார். ஆனால் மனிதனோ தன்னை தானே வழிநடத்திக் கொள்ளவே எத்தனிக்கின்றான். ஆகவே ஒரு யுத்தமானது ஓயாமல் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. மனிதன் தன் கண்களால் எதை உற்றுப் பார்க்கின்றானோ அதன் பின்னால் செல்லவே விரும்புகின்றான். அங்கே தான் அவன் வஞ்சிக்கப்படுகிறான். ஏவாளால் பார்க்க முடிந்ததைக் கொண்டு தான் சாத்தான் அவளை வஞ்சித்தான். அந்த கனி பார்வைக்கு மிக இன்பமான ஒன்றாக இருந்தது. அது ஆத்துமாவின் மரணமாக இருந்தது. அதைப்போலத்தான் இன்றிரவும் கூட தேவன் மனிதரை வழிநடத்த விரும்புகின்றார், ஆகவே அவர் தமக்குத்தாமே ஒரு சிறு கட்டுப்பாடு கோபுரத்தை அவனுடைய இருதயத்தின் மத்தியில் உண்டாக்கி, அதினாலே மனிதர் தேவனுடைய ஆவியினாலே வழிநடத்தப்படுவதற்கு ஏதுவாக இருக்கும் படிக்குச் செய்தார். மனிதனோ தன்னுடைய சொந்த வழி நடத்துதலுக்கு சென்றதுதான் அவருடைய ஐக்கியத்தினின்று அவனை வேறு பிரித்தது - தன்னால் என்ன செய்ய முடியும் என்று தன்னுடைய கண்ணினால் உற்று நோக்கிப் பார்த்தல். ரோமர் 8 : 14  14. ஆகவே இன்றிரவு அந்த விதமாகத்தான் அவன் இருக்கின்றான், மற்றும் இந்தவிதமான காரியங்களால் நடத்தப்படுகின்ற எல்லாரும் அவ்விதமாகத்தான் இருக்கின்றனர். ஆனால் தேவனுடைய குமாரரும் குமாரத்திகளும் தேவனுடைய ஆவியினாலே நடத்தப் படுகின்றனர் என்று வேதாகமம் கூறுகின்றது. உங்கள் உணர்ச்சிகளே உங்களை இயக்குகின்ற ஒன்றாகும். இதை நீங்கள் கவனிக்கலாம் ; உலகத்தின் காரியங்களுக்குப் பின்னால் நடக்க முயற்சிக்கின்ற ஒரு மனிதனோ அல்லது ஒரு பெண்ணோ ஒருக்காலும் தேவனைப் பிரியப்படுத்தவே முடியாது. ஆனால் உலகத்தின் காரியங்களை நோக்கிப்பாராத, ஆனால் ஆவியின் வழிநடத்துதலின்படியே மாத்திரம் செல்லுகின்ற ஒரு மனிதனோ அல்லது ஒரு பெண்ணோ , எப்பொழுதுமே தேவனுடைய சித்தத்தில் இருக்கின்றனர். அது தான் இன்றிரவு ஒரு மகத்தான யுத்தமாக இருந்துக் கொண்டிருக்கின்றது. சாத்தான் மனிதனுடைய கண்ணையும், அவனுடைய தலையைக் கொண்டும் அவனை இயக்க அவனுடைய தலையையும் எடுத்துக்கொண்டான். தேவனோ அவனுடைய இருதயத்தை எடுத்தார்!  15. மனிதன் எப்பொழுதுமே தன்னுடைய தலையைக் கொண்டு ஏதாவதொன்றை சாதிக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறான். அவனோ அதை தன்னுடைய இருதயத்தைக் கொண்டு தான் செய்ய வேண்டியவனாக இருக்கின்றான். தேவன் அவனை இயக்கி, அவனுடைய சிந்தனைகளை சரியாக திசைக்காட்டி நடத்தி, அவனுடைய நடைகளை அவனுக்கு போதித்து, அவனுடைய உணர்ச்சிகளை சரியாக நடத்தும் கட்டுப்பாட்டு கோபுரம் அவனுடைய இருதயமாகும். சிலசமயங்களில் நான் மிகவும் சந்தோஷமடைந்து நான் அதை அப்படியே விட்டு விடுவேன். நான் சுற்றுமுற்றும் பார்த்து யாரையாவது அப்பொழுது கண்டால், பாருங்கள், அப்பொழுது நான் என் கண்களை மக்களின் மீது வைப்பேன். ஆனால் தேவனோ என் கண்களை நான் மூடி வைத்திருக்கும்படிக்கு எனக்கு உதவி செய்வார். மாம்சம் அதற்குள்ளாக ஒன்றுமே செய்ய முடியாதபடிக்கு நான் தேவனுடைய ஆவியால் நடத்தப்பட மாத்திரமே விரும்பு கிறேன். வழக்கமாக போதகர்கள் பிரசங்க பீடத்திற்கு செல்கையில், "இந்த குறிப்பிட்ட குறிப்பிட்ட காரியத்தின் பேரில் நான் பிரசங்கம் செய்தால், இங்கே இந்த சபையில் அதிக தொகை காணிக்கை செலுத்தும் என் சபை அங்கத்தினர் இருக்கின்றார், என் பிரசங்கத்தைக் கேட்டால் அவர்கள் சபையை விட்டு சென்று விடுவார்கள்” என்று சிந்திக்க ஆரம்பிப்பார்கள். அப்பொழுது நீங்கள் மறுபடியுமாக மாம்சத்தை நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்க சென்று விடுவீர்கள். அப்பொழுது தேவன் அந்த போதகரை வழிநடத்த முடியாது. என்ன கூறவேண்டும் என்று ஆவியானவர் என்ன கூறுகின்றாரோ அதைத் தான் நீங்கள் கூற வேண்டியவர்களாக இருக்கிறீர்கள். அப்பொழுது நாம் தேவனுடைய ஆவியால் வழி நடத்தப்படுகின்றோம். மனிதனானவன் ஒரு கட்டுப்பாட்டு கோபுரத்தினாலே கட்டுப்படுத்தப்படுகின்றான் என்றும் அந்த கட்டுப்பாடு கோபுரமே அவன் எப்படி இருப்பான் என்பதையும் தீர்மானிக்கின்றது என்று நாம் கண்டோம். அது அவனை அசைக்கின்றது. அது அவனுடைய உணர்ச்சிகளே. அதைக்கொண்டு தான் அவன் வாழ்கின்றான்.  16. இப்பொழுது, அவர் நம்மை ஒரு செம்மறி ஆட்டிற்கு ஒப்பிடுகின்றார். ஒரு செம்மறி ஆட்டிற்கு வழிநடத்தும் தலைவன் இல்லையென்றால் அதற்கு முற்றிலும் திக்கு திசை தெரியாமல் பேதலித்து விடும். இப்பொழுது நீங்கள் ஆடுகளை வளர்த்ததுண்டானால் அது எவ்வளவு உண்மையான ஒன்று என்பது உங்களுக்குத் தெரியும். நீங்கள் ஆடு வெட்டும் ஸ்தலத்திற்கு எப்பொழுதாவது சென்றிருப்பீர்களானால் ..... ஒரு ஆட்டை வெட்டுகின்ற காரியத்தைப் பார்ப்பது என்பது மிருக ஜீவனிலே இருப்பதிலேயே மிகவும் பரிதாபத்திற்குரிய காரியங்களில் அதுவும் ஒன்றாகும் என்று நான் நினைக்கின்றேன். அந்த சிறு செம்மறி ஆடானது தன்னை வழிநடத்த யாரையாவது ஒருவரைத்தான் நம்பியிருக்கின்றது. ஒரு செம்மறியாட்டை ஆடு வெட்டும் ஸ்தலத்திற்கு கொண்டு செல்ல எதை உபயோகிப்பார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? ஒரு வெள்ளாட்டை அந்த வெள்ளாடு செம்மறியாடை நேராக ஆடு வெட்டும் ஸ்தலத்திற்குள்ளாக வழி நடத்தி அவைகளோடே முன் வரிசை வரை செல்லும். வெட்டுகின்ற இடம் வருகின்ற போது அந்த வெள்ளாடானது குதித்து வெளியே ஓடிவிடும். செம்மறியாடோ நேராக வெட்டும் இடத்திற்குள் சென்று விடும்.  17. இன்றைக்கு மனித வாழ்விலும் உண்மையாக அவ்விதமாகத் தான் உள்ளது. பிசாசானவன் அவனால் முடிந்த வரைக்கும் உங்களை நேராக வெட்டுகின்ற ஸ்தலத்திற்கு வழிநடத்திச் செல்வான். அவன் உங்களை குழப்பத்திற் குள்ளாகக் கொண்டு செல்வான். பரிசுத்த ஆவி அதை கடிந்து கொண்டு அதை விசுவாசிக்க வேண்டாம் என்று கூறிக் கொண்டிருக்கும் போது, அதை, அழகாகக் காணப் படுகின்ற, மற்றும் பார்வைக்கு இன்பமான ஒன்றாக நீங்கள் காணத்தக்கதாக அவன் செய்வான். ஆகவே நாம் எப்போதுமே பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலை மாத்திரமே பின்பற்ற வேண்டும். உங்களை வழி நடத்தும்படிக்கு அந்த ஆவியானது உங்கள் இருதயத்துக்குள் இல்லாவிட்டால் ஆவியின் வழிநடத்துதலை உங்களால் பின்பற்றவே முடியாது.  18. சிலர் இதையும், சிலர் அதையும் கூறுவதைக் குறித்து சகோதரன் டஃப்பீல்ட் சற்று முன் கூறினதை நான் கேட்டேன். அங்கே திருமதி மெக்ஃபெர்சன் வழக்கமாக காத்திருக்கும் அவர்களுடைய அறையில் நான் நின்றுக் கொண்டிருந்தேன். அங்கே நான் சென்று ஜெபிக்க எனக்கு விருப்பம், ஏனென்றால் திருமதி மெக்ஃபெர்சன் மற்றும் மற்றவர்கள் இருந்து காத்திருந்த அது ஒரு சிறு அறை வீடு (Chamber) என்று எனக்குத் தெரியும். முன்பு இந்த ஆலயத்தில் பிரசங்கித்த பால் ரேடார் மற்றும் மகத்தான மக்கள் இங்கு வந்து பிரசங்கிப்பதற்கு முன்னர், என்ன கூற வேண்டும் என்று அறியத்தக்கதாக ஆவியானவரின் பேரில் அந்த அறை வீட்டில் காத்துக் கொண்டிருந்தனர். சில சமயங்களில் நீங்கள் பேச எத்தனித்திருக்கும் செய்தியானது முற்றிலுமாக மாற்றப்பட்டு விடும். எபி. 13 : 8  19. ஆனால் தேவன் வழிநடத்திக்கொண்டிருக்கின்ற வரைக்கும் தாம் என்ன செய்கின்றோம் என்பதை அவர் அறிந்திருக்கின்றார். ஆகவே நீங்கள் எப்பொழுதுமே ஆவியானவருடைய வழிநடத்துதலின்படிதான் செல்ல வேண்டும், பரிசுத்த ஆவியானது எப்போதுமே வார்த்தையுடன் ஒத்துப்போகும் என்பதைக் கவனித்துப் பாருங்கள். இப்பொழுது ஆவியானது வார்த்தைக்கு முரண்பட்ட விதத்தில் நடத்துமானால் அது தேவனுடைய ஆவியே அல்ல. இப்பொழுது , பரிசுத்த ஆவியானது உங்களை வழிநடத்து மானால் அது “இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்" என்று கூறும். ஆனால் அது தேவனுடைய ஆவியாயிராமல், ஒரு மதபக்தியான ஆவியாயும் அல்லது ஏதோ ஒரு வகையான ஆவியாகவும் இருக்குமானால் அது, " அது கடந்து போன ஒரு நாளுக்குரியது, இப்போதைக் குரியது அல்ல” என்று கூறும், அது சரியான ஆவி தான் என்று உன்னால் எப்படி அறிந்து கொள்ள முடியும்? "அவர் மாறாதவராயிருக்கிறார்" என்று அது கூறினதால் தான் அப்படியே தீர்மானிக்க முடிகின்றது. ஓ, நான் பரிசுத்த ஆவியைக் கொண்டிருப்பதற்காக மிக்க மகிழ்ச்சி கொள்கிறான். யோவான் 14:16,17,18 யோவான் 15:26, யோவான் 16:13  20. பாருங்கள், தேவன் அதை முன்பாகவே கண்டிருக்கின்றார், இயேசு, ''நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடேன், நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன். அப்பொழுது பரிசுத்த ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்கு அனுப்புவார், அவர் என்றென்றைக்கும் உங்களுடனே கூட இருப்பார். அவர் வருகின்ற போது அவர் என்னைக் குறித்து சாட்சி கொடுத்து, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார், உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கும்” என்று கூறினார். ஓ, அந்த சத்திய ஆவியானவர்தாமே சத்திய ஆவியாகிய தம்முடைய வார்த்தையுடனே சாட்சி கொடுப்பதைக் காண்பதில் நாம் எவ்வளவாக மகிழ்ச்சி கொள்கிறோம். அப்பொழுது குமாரரும் குமாரத்திகளும் அதைப் பின்பற்றுகின்றனர். அது வேதத்தின் பக்கங்களில் சரியாக நிலைத்து நின்று, தேவனுடைய ஒவ்வொரு வாக்குத்தத்தத்தையும் உறுதிப்படுத்தும்.  21. ஒரு தலைவன் இல்லையென்றால் செம்மறியாடானது தொலைந்து போய்விடும். அதே போல் தான் நாமும் திக்கு திசை தெரியாமல் தொலைந்து போவோம். நாம் வழிநடத்தப்பட வேண்டியவர்களாக உள்ளோம். மிருகங்கள் வழிநடத்தப் படுகின்றன. இங்கே சிலகாலத்திற்கு முன்னர்லுக்பத்திரிக்கையில் காட்டு வாத்துகளைக்குறித்து ஒரு கட்டுரை பிரசுரிக்கப் பட்டிருந்தது என்று நினைக்கின்றேன், எப்படி ஒவ்வொரு இலையுதிர்க்காலத்தின் போதும் இந்த காட்டு வாத்துக்களை தேவன் ஒன்று கூடும்படிக்குச் செய்து ஒரு பெரிய எழுப்புதலை, ஒரு பெரிய ஒன்று கூடுதலை அளிக்கின்றார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நான் அந்த காட்டு வாத்துக்கள் கூடுகின்றதை பார்த்திருக்கின்றேன். நான் இயற்கையை கவனிக்கும் போது தான் முதன் முதலாக தேவனை நான் கண்டு கொண்டேன், அவைகளை ஏதோ ஒன்று வழிநடத்தினதை நான் கண்டேன்.  22. கனடாவின் குளங்களில் பிறக்கின்ற அந்த சிறு வாத்துகள் குளத்தை விட்டு வெளியே வருவதேயில்லை. அது வருடத்தின் வசந்த காலத்தில் பிறந்து சிறகுகள் முளைத்து குளத்திலேயே அது ஒரு வாத்தாக இருக்கும். அது திருப்திகரமான வாழ்க்கை வாழும். அது உண்பதற்கென நிறைய ஆகாரம் அங்கு கிடைக்கின்றது. ஆனால் இந்த மலையின் உச்சியில் பனி ஆரம்பிக்கும். அந்த மலையெங்கும் முதலாம் குளிர்ந்த காற்று வீசும். அப்பொழுது அதன் தலைவன் தண்ணீரின் நேராக தண்ணீரின் நடுவில் சென்று தன்னுடைய தலைமைய மேலே உயர்த்தி நான்கு அல்லது ஐந்து முறை சத்த ஒலியை எழுப்பும், அப்பொழுது குளத்திலுள்ள ஒவ்வொரு வாத்தும் நேராக அதனிடமாக வரும். அப்பொழுது அந்த வழிகாட்டி வாத்து குளத்திலிருந்து நேராக எழும்பிப் பறந்து அதனால் கூடுமான வரைக்கும் நேராகலூசியானாவிற்கு, அந்த நெல்வயல்களுக்கு பறக்கும் - எந்த ஒரு திசை காட்டும் கருவி இல்லாமல் பிரயாணிக்கும். எப்படி அது முடியும்? அதை அவர்கள் உள்ளுணர்வு என்றழைக்கின்றனர் ; நானோ அதை தேவன் என்றே அழைப்பேன். அதுதான் தேவன் அதற்கு அளித்திருக்கும் வழியாகும். ஆகவே அவையெல்லாம் ஒருமித்து இருக்கும் போது தான் அவைகள் ஒன்றாக பறந்து நேராக செல்கின்றன என்பதாகத் தெரிகின்றது. அவைகளின் ஒற்றுமையை ஒரு முறையாவது பிரித்து விடுங்கள் பார்ப்போம்.  23. வடக்கு பிரதேசத்திலே எப்பொழுதோ ஒரு சமயத்தில் வளர்க்கப்பட்ட ஒரு ஆண் வாத்தைக் குறித்து லுக் பத்திரிக்கையில் கூறப்பட்டது. அந்த வாத்து எல்லாரையும் வழி தவறும்படிக்குச் செய்தது. அநேக வாத்துகள் அதனுடன் வராமல் திருப்பிப் பறந்து சென்றன. ஆனால் இந்த வாத்தோ அவைகளைக் கூப்பிட்டுக் கொண்டே இருந்தது. அந்த வாத்து மிகத் தூரமாக பறந்து இங்கிலாந்து வரைக்கும் சென்று விட்டது. தொடர்ந்து பிரயாணித்த வாத்துகள் பிரயாணம் செய்கையில் அநேகம் மாண்டு போயின. ஆகவே அந்த விதமாகத்தான் ..... வழி தவறும்படிக்குச் செய்த இந்த வாத்தைக் குறித்து நான் இப்பொழுது குறிப்பிடவில்லை. ஆனால் நம்முடைய சபைத் தலைவர்களில் அநேகம் பேர் சபையை அந்த விதமாகத் தான் பாதை தவறும்படிக்குச் செய்துள்ளனர் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன். 24. வருடத்தின் இலையுதிர்க்காலம் வருகையில் இந்த வாத்துக்கள் திரண்டு ஒன்று கூடுகின்றன என்று அவர்கள் கூறுகின்றனர். அவை எழுப்புதலுக்கு தயாராக உள்ளன. ஆனால் எந்த வழியாகச் செல்ல வேண்டுமென அவைகளுக்கு தெரியவில்லை. அவை பாதையிலிருந்து மிகவும் அகன்று செல்லத்தப்பட்டதால் அவைகளுக்கு திரும்பிச்செல்வதற்கான வழியே தெரியவில்லை .  25. அதே விதமாகத் தான் இன்றைக்கும் இருக்கிறதென்று நான் நினைக்கின்றேன். பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலுக்கும் ஞானஸ்நானத்திற்கும் மறுபடியுமாக திரும்பி வருவதற்கு பதிலாக சபையானது ஒரு சமுதாய ஒன்று கூடுதல் விருந்து போல் ஆகிவிட்டது! மக்கள் வெகு தூரம் அகன்று சென்று விட்டனர். அவர்கள் ..... நம்முடைய நாட்களில் எழுப்புதலைக் குறித்து கூறுவோமானால், பில்லி கிரஹாம் அநேக முறை அதைக் குறிப்பிடுகின்றார். நம்முடைய நாட்களில் ஒரு எழுப்புதலை நான் காண விரும்புகிறேன். ஆனால் மக்கள் இந்த வழியாகவும், அந்த வழியாகவும், மற்றைய வழியாகவும் வழிநடத்தி, எந்த வழியில் செல்ல வேண்டுமென்றே தெரியாதிருக்கின்ற அளவிற்கு வழிநடத்தும் தலைவர்களாக இருக்கின்றனர். ஓ, உலக முழுவதுமாக மக்கள் நம்முடைய நவீன தலைவர்களின் வழிநடத்துதலுக்குப் பதிலாக அவருடைய வழிநடத்துதலுக்கு திரும்பி வரத்தக்கதாக பரிசுத்த ஆவிக்குள்ளாக பற்றுதல் கொள்ளச் செய்கின்ற மெய்மையின் ஆவியை தேவன்தாமே அனுப்பத்தக்கதாக நான் ஜெபிக்கிறேன்.  26. பார்வைக்கு இனிதாக காணப்படுவதின்படியாக நாம் செல்வதில்லை. "இந்த குறிப்பிட்ட - குறிப்பிட்ட சபையையும், இந்த குறிப்பிட்ட - குறிப்பிட்ட ஸ்தாபனத்தையும் பாருங்கள்” என்று ஒருவர் கூறுகின்றார். அவை மகத்தானது தான், அவைகளை நான் மெச்சுகிறேன், அதற்கு நான் மரியாதை செலுத்தினாலும் கூட ; அதனால் எந்த ஒரு பிரயோஜனமும் கிடையாது, அதற்கு ஒரு சம்பந்தமும் கிடையாது. அவர்கள் தாமே தங்களுடைய தடை வரம்பு எல்லையை மிகவுமாக விலக்கி, இனிமேல் ஒரு போதும் மனிதனுடைய வழிநடத்துதலை ஏற்காமல் பரிசுத்த ஆவிக்கு திரும்பி வரத்தக்கதாகவும் - தேவன் தன்னைபாவத்திலிருந்து இரட்சித்தார் என்றும், உயிரோடெழுந்த கிறிஸ்துவின் வல்லமையைக் கொண்டு தன்னுடைய ஆத்துமாவை பரிசுத்தப்படுத்தி தன்னுடைய வியாதிகளை சுகப்படுத்துகிறார் என்று மனிதன் அறிந்துக் கொள்ளச் செய்யும் அவனுக்குள்ளாக இருக்கும் உள்ளுணர்வுக்கு திரும்பி வர வேண்டும் என்பதற்காக நான் ஜெபிக்கின்றேன். இது முழு சுவிசேஷமாகும், வஞ்சிக்கின்ற அளவிற்கு மாத்திரம் இருக்கின்ற ஒன்றல்ல, ஏவாளை வஞ்சிக்கும் அளவிற்கு சாத்தான் அவளிடம் கூறினான். அவன் அவளிடம் சத்தியத்தை சொன்னான். ஆனால் முழு சத்தியத்தையும் கூறவில்லை . யோவான் 10:4,27 ; 2 கொரி 4:18  27. இப்பொழுது, தேவன் தாமே அந்த கட்டுப்பாடு செய்யும் அறைக்கு வருவாரானால் .... அப்பொழுது அந்த .... “என் ஆடுகள் என் சத்தத்தை அறிந்திருக்கின்றன.” சரி இப்பொழுது, உலக முழுவதிலும் இந்த சமுதாய சுவிசேஷத்தின் விநோதமான சத்தங்களானது “சபையை மாத்திரம் சேர்ந்து கொள்ளுங்கள் அது மாத்திரமே போதுமானது'' என்கின்றனவே, அப்படி யானால் ஏன் அது மற்ற வேறொன்றையும் செய்யவே யில்லை? மக்களைக் குழப்புவதைத் தவிர வேறு எதையுமே அது செய்யவில்லை. இன்றிரவு நமக்கு உள்ள தேவை என்னவெனில் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டு உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்பட்டு, கட்டுப்பாட்டு கோபுரத்தில் ஜீவனுள்ள தேவனுடைய ஆவியினால் வழிநடத்தப்பட்டு, “நான் ஒரு பாப்டிஸ்ட் மற்றும் அவன் ஒரு மெத்தோடிஸ்ட்” என்று கூறாதிருக்கின்ற ஒரு ஒன்றுபட்ட சபை தான் நமக்குத் தேவை. உண்மையான சத்தியமான தேவனுடைய ஆவியானது தன்னுடைய சகோதரனை அல்லது சகோதரியை அடையாளங் கண்டு கொள்ளும், அவன் எந்த விதமான ஒரு குறியீட்டை அணிந்திருந்தாலும் அதைக்குறித்து எனக்கு அக்கறையில்லை. ஓ, காணக்கூடாததை பின்பற்றி நடக்கின்ற, தேவன் நம்மை வழிநடத்தின விதமானது, பரிசுத்த ஆவியின் வழிநடத்து தலானது மறுபடியுமாக நமக்குத் தேவை. நாம் காண்கிற காரியங்களெல்லாம் தற்காலிகமானவை. நாம் காணக் கூடாதிருக்கின்ற காரியங்களெல்லாம் நித்தியமானதாகும்.  28. சில காலத்திற்கு முன்னர் கனடாவில் ஒரு கூட்டத்தை நடத்தினேன். நான் அங்கே தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த போது அங்கே ஒரு மனிதன் தொலைக்காட்சி பெட்டிகள் விற்றுக் கொண்டிருந்தான். அங்கே அமெரிக்காவிலிருந்து வந்த ஒரு நிகழ்ச்சியை அவர்கள் நடத்திக்கொண்டிருந்தனர், அங்கே பண்ணை நிலங்களில் பசு மேய்க்கும் மனிதன் கிட்டார் கருவியை வாசித்துக் கொண்டிருந்தான். அப்பொழுது இந்த மனிதன் “தோழரே, நான் இந்த தொலைக்காட்சிப் பெட்டியை உங்களுக்கு விற்க விரும்புகிறேன்” என்று என்னிடமாகக் கூறினான். அதற்கு “நான் ஒரு சுற்றுலா பயணி மாத்திரமே” என்றேன். "ஓ, அப்படியா” என்றான். பிறகு அவன் “நீங்கள் இந்த வழியாக பிரயாணிக்கிறீர்களா?” என்றான். நான், “இல்லை, நான் இங்கே ஒரு கூட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறேன்” என்றேன். அவன் “ஓ, அப்படியானால் இங்கே உள்ள இந்த பிரன்ஹாம் குழுவில் நீங்கள் இல்லை தானே?” என்றான். அதற்கு நான், “ஆம் ஐயா, நான் அதில் இருக்கிறேன்” என்றேன். அதற்கு அவன், “அந்த ஆளைக்குறித்து நீர் என்ன நினைக்கின்றீர்?” என்று கேட்டான். அப்பொழுது அவனுக்கு பதிலாகக் கூற என்னிடம் ஒன்றுமே இருக்கவில்லை . நான், "ஓ, அந்த ஆராதனைக் கூட்டங்கள் அருமையானவைகளாக உள்ளன என்று நான் நினைக்கின்றேன்” என்றேன். மேலும் நான், “கடந்த இரவு நீங்கள் அந்த கூட்டத்தில் இருந்தீர்களா?” என்று கேட்டேன். அதற்கு அவன், “ஆம் நான் இருந்தேன்” என்றான். 29. அப்பொழுது நான், “கட்டிலை விட்டு ஒரு மனிதன் எழுந்து நடந்தானே, அதைக் குறித்தும், ஒரு இராணுவ வீரனின் பெயர் அழைக்கப்பட்டு, அவன் யார் என்று கூறப்பட்டு, எத்தனை வருடங்களாக வியாதியில் இருந்தான் என்றும் கூறப்பட்டதே அதைக்குறித்தும் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்" என்று கூறினேன். அவன், “ஓ அதைக்குறித்து நான் ஒன்றுமே நினைப்பதே யில்லை. ஏனென்றால் அது நிரூபிக்கப்படுவதை நான் காண வேண்டும். ஒருவனை வசப்படுத்தும் வசீகரக சாஸ்திரம் என்னிடம் பலிக்காது அதை நான் நம்புவதில்லை” என்றான்.  30. என் வயதான தென்பாகத்து அம்மா, “மாட்டை கயிற்றோடே அப்படியே விட்டுவிடு. அது தானாக சிக்கிக் கொள்ளும்” என்ற கருத்தைக் கொண்டிருந்தார் என்று உங்களுக்குத் தெரியும்.  31. மேலும் அவன், “விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்படாத எந்த ஒன்றிற்கும் அர்த்தமென்பதே கிடையாது என்று தான் நான் நினைக்கின்றேன்” என்றான்.  32. அப்பொழுது தான், “நான் வித்தியாசமாக இருக்க வேண்டுமென்று எனக்கு விருப்பமில்லை, ஆனால் இப்பொழுது நான் வித்தியாசப்பட வேண்டியவனாக இருக்கிறேன். விஞ்ஞானப் பூர்வமாக நிரூபிக்கப்பட முடிகின்ற காரியங்கள் உண்மையானதல்ல. விஞ்ஞானப் பூர்வமாக நிரூபிக்கப்பட முடியாத காரியங்கள் மாத்திரம் தான் உண்மையானதாகும்” என்று கூறினேன். "ஓ, அது முட்டாள் தனமானதாகும்” என்று கூறினான்.  33. அப்பொழுது நான், “சரி, நான் உன்னிடத்தில் ஒரு காரியத்தைக் கேட்க விரும்புகிறேன். அன்பு என்றால் என்ன என்று உன்னால் கூறமுடியுமா? அன்பு என்றால் என்ன என்று உன்னால் விஞ்ஞானப்பூர்வமாக எனக்கு காண்பிக்க முடியுமா? நீ மருந்து கடைக்குச் சென்று ஒரு கால்பாகம் அன்பை எனக்கு வாங்கித்தர முடியுமா ; அது எனக்கு இப்பொழுது தேவைப்படுகின்றது” என்றேன். பாருங்கள்? உங்களால் அதைக் காண முடியாது. அது காணக்கூடாதது. ஜீவன் என்றால் என்ன என்று எனக்குக் காண்பியுங்கள். எனக்கு சிறிது ஜீவன் காணப்படுகின்றது. அதின் கால்பாகத்தை நீங்கள் எனக்கு வாங்கித் தர முடியுமா? ஜீவன் என்றால் என்ன என்று எனக்குக் காண்பியுங்கள். அன்பு என்றால் என்ன என்று காண்பியுங்கள், மனிதனின் செயற்பண்பு என்ன என்றும், பரிசுத்த ஆவி என்னவென்றும், தேவன் என்றால் என்ன என்றும் எனக்குக் காண்பியுங்கள். உண்மையான, நிலைத்திருக்கின்ற காணக்கூடாத காரியங்கள் தான் அவைகள் ஆகும்! இந்த காரியங்கள் பூமிக்குரியவைகளும் அழிந்து போகக்கூடியவை களுமாகும். ஆனாலும் நாம் பூமிக்குரிய காரியத்தின் பேரில் மிகவுமாக முக்கியத்துவம் கொடுத்து அதைக்குறித்து மிகவும் அக்கறைக் கொண்டவர்களாக இருக்கின்றோம். ஆனால் ஆவிக்குரிய காரியத்தின் பேரில் சிறிது கவனத்தை மாத்திரம் செலுத்துகிறோம்.  34. மேலும் நான், “உதாரணத்திற்கு, சரியாக இந்த அறையினூடாக தொலைக்காட்சி படங்கள் வந்து கொண்டிருக் கின்றன. நீ அந்த படத்தை எனக்கு காண்பிக்க வேண்டும்” என்று கூறினேன். அதற்கு அவன், "ஓ, ஆம் நிச்சயமாக. அது தொலைக்காட்சி பெட்டியிலுள்ள ஒளி ஊடுருவும் பொருளின் மேலும், படக்குழாயின் மேலும் அது பட்டு படத்தைக் காண்பிக்கின்றது” என்றான்.  35. நான், "ஆனால் ஒரு மனிதன் அமெரிக்காவில் இருக்கின்றான், அவனுடைய படம் இங்கே காற்றின் வழியாக வருவதை உன்னால் காணமுடியவில்லை. தொலைக்காட்சி பெட்டியினால் அவனுடைய படத்தை எடுக்கின்றாயே'' என்றேன். அவன், “ஆனால் எங்களால் அதை நிரூபிக்க முடியும். ஏனென்றால் பெட்டியில் தெரிகின்ற படமானது அங்கே இருப்பதைத் தானே காண்பிக்கின்றது. அப்படம் இங்கே உள்ளது என்று நிரூபிக்கத்தக்கதாக அப்படத்தை அனுப்பும் நிலையம் ஒன்று இருக்கிறதே” என்றான்.  36. நான், “ஆம், எங்களாலும் நிரூபிக்க முடியும் ..... (ஒலி நாடாவில் காலியிடம் - ஆசி) ஏனென்றால் அதை அனுப்பும் உயிர்த்தெழுந்த இரட்சகரை மகிமையில் நாங்கள் கொண்டிருக்கின்றோம். பரிசுத்த ஆவியானவர் அதை வெளிப்படுத்தி அதை தத்ரூபமாக்குகின்றார். ஆதலால் அனுப்பும் இடமும் (sending station) மற்றும் பெற்றுக்கொள்கிற இடமும் (receiving station) எங்களுக்கு உண்டு ” என்று கூறினேன். அது சரியே. எல்லாவற்றையும் அறிந்திருக்கின்ற பரலோகத்தில் உள்ள தேவன் தம்முடைய சபையில் ஒரு வரத்தை வைத்து அதை பெரிதாகச் செய்து அதனூடாக தம்மை தாமே பிரதிபலித்து, விஞ்ஞானிகளால் முற்றிலுமாக நிரூபிக்கப்படவும் இயலாத காரியங்களை உரைக்கின்றாரே, பாருங்கள், நாம் காண்கின்றவைகளைக் கொண்டு நாம் நடப்பதில்லை ; நாம் காணக்கூடாதவைகளைக் கொண்டு தான் நாம் நடக்கின்றோம்.  37. காணக்கூடாததை நோக்கிப் பார்த்த, அந்த விதமாக நடந்த சில மனிதரை நாம் பார்ப்போமாக. உதாரணத்திற்கு நோவாவை எடுத்துக் கொள்வோம். வானத்திலிருந்து ஒரு சொட்டு தண்ணீர் விழுவதற்கு முன்னரே மழை வருவதை நோவா கண்டான். வானத்திலிருந்து மழை என்பது வந்ததே கிடையாது. வானம் எப்பொழுதுமே தெளிவாக இருக்கும். அதிலே மேகமே இருக்காது, பூமியின் மேல் மேகம் என்பது இருந்ததேயில்லை. ஏன்? ஏனென்றால் மரம் செடிகளுக்கு நீர் ஊற்றுகள் மூலமாக தண்ணீர் பாய்ச்சுவதே தேவனுடைய திட்டம் ஆகும். ஆனால் தேவன் “மழை வரப்போகின்றது'' என்று கூறினதாலே நோவா மழை வருவதைக் கண்டான். ஒரு சொட்டு மழை வருவதற்கு நூற்று இருபது வருடங்களுக்கு முன்னதாகவே கண்டு அதிலிருந்து புறம்பே செல்வதற்காக ஆயத்தங்களையும் செய்தான்.  38. நாமும் கூட விசுவாசத்தினாலே கர்த்தராகிய இயேசுவின் வருகையை அதற்கு முன்னதாகவே கண்டு, என்றாவது ஒரு நாளில் அவியாத அக்கினியால் சுட்டெரிக்கப்படவிருக்கின்ற இந்த உலகத்திலிருந்து வெளியே செல்லத் தேவையான ஆயத்தங்களை நாம் செய்து கொண்டிருப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சியாகும். ஓ, நோவாவிடம் தேவன் பேசினார், “நோவா...'' "கர்த்தாவே நீர் எங்கேயிருக்கின்றீர்?" “நான் எங்கே இருக்கின்றேன் என்பது ஒரு காரியமல்ல. நான் இருக்கிறவராகவே இருக்கிறேன். மழை வரப் போகின்றது .  39. அந்த வார்த்தையை அவன் கேட்ட முதற்கொண்டு "மழை வரப்போகின்றது, மழை வரப்போகின்றது” போன்ற ஒரு துடிப்பானது அவனுடைய இருதயத்திற்குள்ளாக அடித்துக் கொண்டேயிருந்தது. மேகங்கள் வருவதை அவன் கண்டான். மழைக்கான ஆயத்தங்களை அவன் மேற் கொண்டான்.  40. இங்கே இந்த சக்கர நாற்காலிகளிலும், கட்டில்களிலும் இருக்கின்ற மக்கள் மற்றும் மரிக்கத்தக்கதாக வியாதியாக கிடக்கின்ற நீங்கள் தாமே இன்றிரவு தேவனுடைய வார்த்தையை கேட்பீர்களானால், அது எப்படி இருக்கும் என்று சொந்தமாக யோசித்துப் பார்க்காதீர்கள் ; எவ்வளவு காலமாக அப்படியே உட்கார்ந்து கொண்டிருக்கிறோம் என்றும், எவ்வளவு காலமாக வியாதியாயிருக்கிறோம் என்றும் நினைத்துக் கொண்டிருக்க வேண்டாம். தேவன் என்ன கூறியுள்ளார் என்பதை மாத்திரமே சிந்தியுங்கள். அப்பொழுது உங்கள் இருதயத்திலே பரிசுத்த ஆவியின் துடிப்பு வந்து “அது உண்மையே" என்று கூறும். “அது உண்மை என்று எப்படி உங்களுக்குத் தெரியும்?” என்று பிசாசு கூறுவான்.  41. "அது உண்மை என்று எனக்குத் தெரியும். அது தேவனுடைய வார்த்தையாகும். அது சத்தியமாகும். அது தான் உண்மை என்று உங்கள் இருதயத்தில் ஒன்று துடிக்க ஆரம்பிக்கும். அப்பொழுது ஆயத்தப்படுங்கள். நான் இன்றிரவு இந்த பிரசங்க பீடத்தில் நிற்பது எவ்வளவு நிச்சயமானதோ அதே போன்று தான் நீங்கள் அங்கிருந்து வெளியே வருகிறீர்கள். நீங்கள் என்ன காண்கிறீர்களோ அதை நோக்கிப் பார்க்காதீர்கள் - எவ்வளவு மோசமாக முடமாகி நான் இருந்தாலும், எவ்வளவாக நான் வியாதிப்பட்டிருந்தாலும், மருத்துவர் என்ன கூறியிருந்தாலும் சரி, அதை நோக்கிப் பார்க்காதீர்கள் ; காணக்கூடாததை, தேவன் கூறியிருக்கின்றார் என்பதை நோக்கிப் பாருங்கள். நீங்கள் எந்த ஒரு வித்தியாசத்தையும் உணருவதற்கு முன்னால், வலி நீங்குவதற்கு முன்னால், கை அசைவதற்கு முன்னால், கண்காட்சியைக் காண்பதற்கு முன்னதாகவே ஆயத்தப்படுங்கள், ஏனென்றால் அது வரப்போகின்றது, தேவன் அமர்ந்திருக்கின்ற கட்டுப்பாடு செய்யும் கோபுரம் அமைந்திருக்கின்ற உங்கள் இருதயத்திற்குள் அந்த துடிப்பானது துடிக்க ஆரம்பித்து துடித்துக் கொண்டிருக்கையில் அது நடக்கும். இப்பொழுது நான் பக்தி பரவசம் அடைகின்றேன்.  42. பரிசுத்த ஆவி ஒரு மனிதனை வழிநடத்தி, அவனுக்கு காரியங்களைக் கூறி, அவனை வித்தியாசமானவனாக நடக்கச் செய்து அவன் அவ்வாறு நடக்கும் என்று உலகமானது நம்பவே முடியாத காரியங்களை விசுவாசிக்கவும், காரியங்களை பெற்றுக் கொள்ளவும் செய்யும் என்று நான் நினைக்கின்றேன். நான் ஒரு சாட்சியாவேன் ; ஒரு காலத்தில் நானும் குருடனாக இருந்தேன், கிட்டத்தட்ட வழிநடத்தப்பட வேண்டிய நிலையில் நான் இருந்தேன். ஆகவே நான் எதைக்குறித்து பேசிக்கொண்டிருக்கிறேன் என்பதை இப்பொழுது அறிந்திருக்கிறேன், அது அந்த பரிசுத்த ஆவியேயாகும். மத். 18 : 20  43. ஓ, உங்கள் இருதயத்தில் “இயேசு கிறிஸ்து நம் மத்தியில் இருக்கின்றார்” என்று ஆவியானவரின் துடிப்பானது எழும்ப ஆரம்பிப்பதை உங்களால் உணரமுடிகின்றதல்லவா. “எங்கேயாகிலும் இரண்டு பேராவது மூன்று பேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ அங்கே அவர்கள் நடுவிலே இருப்பேன்!” ஒரு இதயத் துடிப்பைப் போல ஏதோ ஒன்று அசைகின்றது. அது உங்கள் ஆவிக்கு வலிமையைச் செலுத்துகின்றது. அது உங்கள் மனதிற்கு வலிமையை செலுத்துகின்றது. பிறகு நீங்கள் உலகத்தின் காரியங்களைக் காணக்கூடாதவாறு அது உங்கள் கண்கள் காண்கின்றவைகளை இருட்டடிப்பு செய்து விடும். தேவன் என்ன கூறியுள்ளாரோ அதைத் தான் நீங்கள் விசுவாசிக்கிறீர்கள்.  44. நோவா காத்திருந்து, விசுவாசித்து பயத்துடனே சென்று ஒரு பேழையைக் கட்டினான். ஒரு போதும் குற்றங் காணாதீர்கள்! என்ன, அவர்கள் கூறினது . . . “அந்தக் கிழவனுக்கு பைத்தியம் பிடித்து விட்டது போலும்.'' ஆனால் இன்னுமாக மேகங்கள் ஒன்று கூட வரவேயில்லை. ஒரு மேகம் இருப்பதற்கு முன்னதாகவே, வானத்தில் ஒரு துளி தண்ணீர் இருப்பதற்கு முன்னதாகவே, நோவா, இயற்கைக் கண்களால் காணக் கூடாததைக் கொண்டு, தன் ஆவிக்குரிய கண்ணினால் தேவனுடைய வார்த்தையுடன் பொருந்த வைத்து மழை பொழிவதைக் கண்டான்.  45. ஓ, இன்றிரவில் இந்த ஏஞ்சலாஸ் ஆலயத்தில் உள்ள நாம் தாமே நம்முடைய இருதயங்களை - நம்முடைய இயற்கைப் பிரகாரமான மனதை அல்ல (அதை அப்படியே விட்டு விடுங்கள் ; சொந்த மூளையைக் கொண்டு யோசித்தலை புறம்பாக்குங்கள்), ஆனால் நம்முடைய இருதயங்களைக் கொண்டு தேவனுடைய வார்த்தையுடன் பொருந்த வைத்து ஒரு எழுப்புதல் பொங்கி எழுவதைக் காணவும், பலிப்பீடங்கள் நிறைந்திருப்பதைக் காணவும், சபை - மக்களால் நிறைந்திருக்கக் காணவும், எழுப்புதலானது லாஸ் ஏஞ்சலிஸ் முழுவதுமாக பரவுவதைக் காணவும், அணைக்கப்பட முடியாத ஒரு எழுப்புதல் தீயாக அது இருக்கவும் - நம்முடைய இருதயங்கள் பரிசுத்த ஆவியின் வல்லமையால் துடிக்க ஆரம்பிக்கவும் - இன்றிரவு லாஸ் ஏஞ்சலிஸில் இந்த விதமான ஜெப ஆராதனைகள் இருக்கும்படியாகச் செய்வோமாக, அது நிச்சயமாக சம்பவிக்கும். சபையானது சரியாகப் பொருந்த வைக்குமானால் நிச்சயமாக அது நடப்பிக்கும். 46. இன்றிரவு இங்குள்ள வியாதியாயுள்ள மக்கள் தாமே “தேவன் தேவனாக இருக்கின்றார். அவர் தேவன் இல்லை யென்றால் ஏன் அவருக்கு நாம் ஊழியம் செய்ய வேண்டும்? அவர் இன்னுமாக சுகமளிப்பவராக இருக்கின்றார். அவர் சர்வ வல்லமையுள்ள தேவனாக இருக்கின்றார் என்றால் அவரால் எல்லா காரியங்களையும் செய்ய முடியும். அவர் ஒரு வாக்குத் தத்தத்தைச் செய்திருப்பாரானால் அவரால் அதை உடைத்து போட முடியாது. அவர் அதை காத்துக் கொள்ளத்தான் வேண்டும்'' என்று நினைக்க ஆரம்பிப்பார்களானால் எப்படியிருக்கும்? அப்பொழுது அந்த துடிப்பு உங்கள் இருதயத்துக்குள்ளாக எழும்ப ஆரம்பிக்கும். ஏதோ ஒன்று சம்பவிக்கப் போகின்றது. அதை நிறுத்த ஒன்றுமே கிடையாது. அது ஒரு அக்கினியாகும். பலத்த காற்றடிக்கும் நாளிலே ஒரு கட்டடம் தீயினால் கொழுந்து விட்டெரிவது போலாகும். பரிசுத்த ஆவி அந்த அக்கினியை பலத்த காற்றினால் வீசும் போது அது எரியும். அது உங்களுக்கு ஒரு தத்ரூபமான ஒன்றாகும் வரைக்கும் அது எரிந்து கொண்டே இருக்கும். எபிரெயர் 11:10  47. நோவா ..... ஆபிரகாம், தேவன் தாமே கட்டி உண்டாக்கின ஒரு நகரம் இருக்கின்றது என்று தேவனுடைய வார்த்தை ஒரு நாள் அவனிடமாகப் பேசினதை அவன் கேட்டான். ஆனால் அவனால் அந்த நகரத்தைக் காணமுடியவில்லை. அவன் அந்த சிறு மூட்டையை தன் முதுகில் சுமந்து, அந்த நகரத்தைக் காணப் புறப்பட்டான். இன்றிரவு அவன் அந்த இடத்தில் இன்பம் அனுபவித்து மகிழ்ந்து கொண்டு இருக்கின்றான் என்று நான் விசுவாசிக்கின்றேன். நிச்சயமாக, தாம் என்ன செய்துள்ளார் என்றும், தேவன் தாமே கட்டி உண்டாக்கின ஒரு நகரம் இருக்கின்றது என்பதை தேவன் ஆபிரகாமிடம் கூறின போது அவன் வைத்திருந்த எல்லாவற்றையும் எடுத்து மூட்டையாக கட்டி எடுத்துக் கொண்டு அந்த நகரத்தை நோக்கிப் பார்க்க ஆரம்பித்தான். இருபத்தைந்து வருடங்களுக்குப் பிறகு, அவனுக்கு இருபத்து ஐந்து வருடங்களாக வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட குமாரனைக் குறித்த வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பிறகு, ஒரு குமாரனைப் பெற்றுக்கொண்டான். அந்த குமாரனின் மூலமாக அந்த நகரத்தின் கதவு ஆபிரகாமுக்கும் அவனுடைய எல்லா பிள்ளைகளுக்கும் திறந்தது. ஏன்? அவனால் அதைக் காண முடியவில்லை . அவன் பாலைவனங்களிலும், மலைகளிலும், பள்ளத்தாக்குகளிலும் மற்றும் எல்லாவிதமான சூழ்நிலை களிலும் அவன் திரிந்து, தேவனால் கட்டி உண்டாக்கப்பட்ட ஒரு நகரத்தை நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கும் தான் ஒரு அந்நியனும் பரதேசியுமாயிருக்கிறேன் என்று அறிக்கையிட்டான்.  48. ஒவ்வொரு மறுபடியும் பிறந்த பிள்ளையும் இன்றிரவு ஆபிரகாமின் ஆசீர்வாதத்தினூடாக வருகின்றது. அது ஆபிரகாமுக்கு அளிக்கப்பட்ட வாக்குத்தத்தமாதலால், பரிசுத்த ஆவியைப் பெறும் ஒவ்வொரு தேவனுடைய பிள்ளைக்கும் “நான் ஒரு நகரத்தை நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்' என்னும் அதே துடிப்பு தான் இருக்கும். அது லாஸ் ஏஞ்சலிஸ் அல்ல. அது நியூயார்க் அல்ல. அது லூயிவில் அல்ல. அது பரலோகம் ஆகும் ! நாம் அவருக்குச் சொந்த ஜனங்களாயும், அந்நியருமாயிருக்கிறோம் என்று அறிக்கையிடுகிறோம். ஏனென்றால் நம்மால் காணக்கூடாத ஒன்றை நோக்கி நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம் ; ஆனால் கட்டுப்பாட்டு கோபுரத்தில் இருக்கின்ற ஒன்று “அது அங்கே உள்ளது' என்று கூறுகின்றது. இங்கிற்கும் அங்கிற்கும் இடையே உள்ள ஒவ்வொரு மீட்பின் ஆசீர்வாதங்களையும் நமக்கு அளிப்பதாக தேவன் வாக்குத்தத்தம் செய்துள்ளார். நாம் நடந்து கொண்டிருக்கிறோம், நாம் பரதேசிகளாக இருக்கின்றோம். இன்னார் - இன்னார் என்ன கூறினாலும் அதைக்குறித்து எனக் அக்கறையில்லை, எனக்குள்ளாக இருக்கின்ற ஒன்று அது உண்மை என்று கூறிக்கொண்டிருப்பதை நான் அறிவேன். நான் நடக்கவும், நோக்கிப் பார்க்கவும், துதிக்கவும், அறிக்கையிடவும் ஆரம்பிக்கின்றேன். நிச்சயமாக, ஏனென்றால் அது வரப்போகின்றது. அப்படியாகக் கூறியிருப்பவர் இராஜாதி இராஜா ஆவார். 49. மோசே எகிப்தில் இருந்தபோது அந்த இடத்தில் ஒரு காரியத்தை தெரிந்துக் கொள்ள வேண்டியவனாயிருந்தேன். ஒரு நாளிலே அவன் இராணுவத்தில் ஒரு பெரிய தளபதியாக இருக்கையில் வெளியே எட்டிப்பார்க்க பார்வோன் உபயோகித்த அதே ஜன்னலின் வழியாக அவன் வெளியே எட்டிப்பார்த்தான். பார்வோன் இஸ்ரவேலரை மண் பிசைகிறவர்களாகவும், அடிமைகளாகவும் மட்டுமே பார்த்தான். அவர்கள் அருமையானவர்களாக தென்படவேயில்லை. எல்லா எகிப்தியர்களும் அதே விதமாகத் தான் அவர்களை நோக்கிப் பார்த்தார்கள். ஆனால் மோசே அவ்விதமாகப் பார்க்கவில்லை . அவர்களில் அழகானது என்பதே காணப்படவில்லை, ஏனென்றால் அவர்கள் கந்தையணிந்து கரடு முரடானவர்களாகவும் ஏழைகளாகவும், எந்த நேரமும் அடிக்கப்பட்டவர்களாகவும் இருந்தனர். அவர்கள் உலகத்தால் புறக்கணிக்கப்பட்ட ஜனங்களாக இருந்தனர். எபிரெயர் 11:24,26,27  50. இன்னும் ஒரு அடி வைத்தால் சிங்காசனம் என்கின்ற நிலையில் மோசே இருந்தான். ஆனாலும் விசுவாசத்தினாலே அவன் காணக்கூடாததை நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தான். மோசே தான் பார்வோனின் குமாரன் என்னப்படுவதை வெறுத்தான். ஏனென்றால் அவன் ஆபிரகாமின் குமாரன் என்பதை அறிந்திருந்தான். வியூ! இப்பொழுது, நான் அதிதீவிர மத பக்தி வைராக்கியம் கொண்டவன் என்றழைக்கப்படுவதை நீங்கள் அறிவீர்கள். ஒரு காரியத்தைக் குறித்து தான் நான் பக்தி வைராக்கியம் கொண்டிருக்கின்றேன். அது இயேசுகிறிஸ்துவும் அவருடைய வாக்குத்தத்தங்களையும் குறித்ததாகும். பார்வோனின் குமாரனாயிருப்பதை விட ஆபிரகாமின் குமாரனாக இருப்பதையே மோசே தெரிந்து கொண்டான்! ஏன்? அதை அவனால் இயற்கைப் பிரகாரமாக காண முடியவில்லை . அவன் ஆபிரகாமுடைய குமாரனாக இருப்பானானால் மண் பிசையும் பள்ளமும், அடிமையின் சாட்டையையும் தான் அவனுக்காக இருந்தது. அது என்னவாயிருந்தது? அவன் இனிமேல் வரும் பலன் மேல் நோக்கமாயிருந்தான், ஏனென்றால் அவன் வாக்குத்தத்தம் பண்ணினவரை, அதரிசனமானவரைத் தரிசிக்கிறது போல உறுதியாயிருந்தான். உங்களுக்குப் புரிகின்றதா.  51. இங்கே ஹாலிவுட்டில், லாஸ் ஏஞ்சலிஸில், உலகத்தின் நாகரீக இடமாகிய இங்கே, அழகான சபைக்கட்டிடங்கள் மற்றும் பிரமாண்டமான கோபுரங்கள் கொண்ட சபைக் கட்டிடங்களும் மற்றும் எல்லாமும் இருக்கின்ற இந்த இடத்தில் இன்றிரவு நீங்கள் எந்தவிதமான தெரிந்து கொள்ளுதலை செய்யப் போகிறீர்கள்? எந்தவிதமான தெரிந்து கொள்ளுதலை நீங்கள் செய்யப்போகின்றீர்கள்? சகோதரனே, சகோதரியே, நான் உங்களுக்குக் கூறட்டும், இருதயத்திலே கட்டுப்பாட்டை எடுத்துக் கொள்ளும் அந்த பரிசுத்த ஆவியை கண்டெடுங்கள். அப்பொழுது தேவன் தான் தேவன் என்கின்ற துடிப்பானது துடிக்க ஆரம்பிக்கும், உலகத்தின் காரியங்கள் அழிந்து போகும். அப்பொழுது நீங்கள் காணமுடியாத காரியங்களின் பின்னால் நடக்க ஆரம்பிப்பீர்கள். உலகத்தின் மக்களுக்கு நீங்கள் பைத்தியக்காரராக தென்படுவீர்கள். அவர்கள், "உம், அந்த பெண்ணிற்கு மூளைக் கோளாறாகிப் பித்து பிடித்து விட்டது. அந்த மனிதன் பைத்தியத்தின் உச்சத்திற்கே சென்று விட்டான். ஆம், புற்று நோயிலிருந்து அவன் சுகமாக்கப்பட்டதாகக் கூறுகிறான். ஆம், அவனுடைய குருட்டுத் தனத்திலிருந்து சுகமாக்கப்பட்டான் என்றும், இது அது மற்றதிலிருந்து அவன் சுகமாக்கப்பட்டான் என்கிறான், அல்லது அவன் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்டான் என்றும் அதுதான் அவனை மாற்றினது என்று அவன் கூறுகின்றான். உம், அவன் லாட்டரியைப் போன்ற சூதாட்டங்களில் கலந்து கொள்வதே கிடையாது. சீட்டு விளையாட்டு மேஜைகளில் அவனை இப்பொழுதெல்லாம் காண்பதேயில்லை. அந்தப் பெண் சீட்டு கட்டு விளையாட்டு விளையாடுவதில்லை. அவலட்சணமான ஆடைகளை அணிவதை அவள் விட்டு விட்டாள். அவள் ஒரு புதிய பெண்ணாகி விட்டாள், அவளிடம் ஏதோ ஒரு கோளாறு உள்ளது” என்று கூறுவார்கள். நிச்சயமாக. ஏதோ ஒன்று அவளுக்கு சம்பவித்து விட்டது.  52. பழைய உலகப்பிரகாரமான சிந்தை மரித்து கிறிஸ்துவின் சிந்தை அந்தப் பெண்ணின் இருதயத்தில் இடம் பிடித்தது. இப்பொழுது அவள் நடந்து, தான் பிரபலமாக இருக்கப் போகின்ற, தேவனுடைய குமாரரோடும் குமாரத்திகளோடும் ரதத்தில் பயணிக்கப்போகின்ற, என்றென்றுமாக கர்த்தராகிய இயேசுவின் விருந்தாளியாக அவள் இருக்கப்போகின்ற அந்த நகரத்தை எதிர் நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கின்றாள். தேவன் தாமே கட்டி உண்டாக்கிய அந்த நகரத்தை நோக்கி அவள் காத்துக்கொண்டிருக்கிறாள். இந்த உலகத்தின் அசுத்தத்தைக் குறித்து அவள் அக்கறைக் கொள்வதில்லை. பாருங்கள், ஏதோ ஒன்று அவளுக்குள் சிங்காசனமிட்டிருக் கின்றது. தேவன் அவளுடைய இருதயத்திற்குள் வந்துள்ளார். அது அவளை உலகத்தின் நாகரீகங்களுக்கு இருட்டடிப்பு செய்து விட்டது. அவர் கட்டுப்பாட்டை எடுத்துக் கொள்கையில் முதலில் சம்பவிப்பது அது தான்.  53. பிறகு மோசே அந்த காணக்கூடாததின் தரிசனத்தைப் பெற்றவுடன் அவன் என்ன செய்தான் என்பதை நீங்கள் கவனித்துப் பார்க்க விரும்புகிறேன். இதோ அவன் நின்று கொண்டிருக்கின்றான். அங்கே சிங்காசனமானது வைக்கப் பட்டுள்ளது, உலகத்திலுள்ள எல்லாமும், சம்பவிக்க இருப்பவைகளிலே இருக்கின்ற அழகான ஒவ்வொன்றும் அவன் கரத்தினருகே வைக்கப்பட்டுள்ளது. அவன் எகிப்தின் பார்வோனாகும் காரியம் வைக்கப்பட்டிருக்கிறது. அவன் முன்னே எல்லா பணமும், பெண்களும், அழகான இளம்பெண்களும், சமூகக் காரியம் அத்தனையும், எல்லாவிதமான புகழும், உலகத்தின் களியாட்டமும் அவன் கரத்தினருகே வைக்கப்பட்டிருந்தது. ஆனால் அங்கே மண்பிசையும் பள்ளத்தில் எதை நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தான்? அந்த மண்பிசையும் பள்ளம், வறுமை, அவன் வசித்த சமுதாயத்தில் சமுதாய அந்தஸ்தில் கடும் இறக்கம், உலகத்தின் பளிச்சென்ற காரியங்களுக்கு தன் முதுகைக் காட்டுவது போன்றவற்றைத் தவிர வேறெதையும் அது அவனுக்கு வைத்திருக்கவில்லை. அவர்களில் ஒருவனாக ஆவதற்கு அவன் மண் பிசையும் பள்ளங்களுக்கு அவன் செல்ல வேண்டியதாயிற்று.' எபிரெயர் 11:27  54. சில காலத்திற்கு முன்னர் நான் ஊழியம் செய்வதற்கு அபிஷேகிக்கப்பட்டிருந்த ஒரு குறிப்பிட்ட ஸ்தாபன சபையில், “பில்லி, நீங்கள் அந்த மக்கள் குழுவோடு செல்வீர்களானால் நீங்களும் ஒரு பரிசுத்த உருளையராகி விடுவீர்கள்” என்று என்னிடமாக கூறப்பட்டதை நான் நினைவில் கொள்கிறேன். ஆனால் அந்த மக்களை நோக்கிப் பார்த்தேன். அவர்கள் முன் வைத்து மொழிந்த மதத்தைக் குறித்து அவர்கள் வெட்கப்படாமல் அவர்களுக்குள் இருந்த ஒரு வாக்குத்தத்தத்தைக் கண்டேன். அவர்கள் தேவனுடைய பிள்ளைகளாயிருந்ததை நான் கண்டேன், உலகில் இருந்த எல்லாவற்றையும் பார்த்தேன். ஆனால் அம்மக்களோ வாக்குத்தத்தத்தின் சுதந்தரவாளிகளாக இருப்பதை நான் கண்டேன் ; அப்பொழுது நான் அவர்களுடன் என்னுடைய இடத்தை எடுத்துக் கொண்டு அவர்களின் ஒருவனானேன். இப்பொழுது, நான் “ஓ, அவர்கள் அருமையான மக்கள் என்று நான் நினைக்கின்றேன்” என்று கூறி அவர்களுக்காக பரிவிரக்கம் கொள்ளவில்லை. அது எந்த ஒரு நல்லதையும் செய்யாது, நீங்கள் அவர்களில் ஒருவராக ஆக வேண்டும்! மோசே, “இப்பொழுது, நான் என் மக்களுக்காக பரிவிரக்கம் கொள்கிறேன். அவர்கள் அருமையானவர்களும் எல்லா நல்ல காரியத்தைக் கொண்டவர்கள் என்று நான் நினைக்கின்றேன். நானோ இங்கே மேலே இருக்கின்றேன். அவர்களோ அங்கே கீழே இருக்கின்றனர்” என்று கூறவில்லை. அப்படி நினைக்கவில்லை, மோசேயோ சென்று அவர்களுடன் ஒருவனாக ஆனான். ஏனென்றால் விசுவாசத்தினாலே அவன் அதரிசனமானவரைத் தரிசிக்கிறது போல உறுதியாயிருந்தான். அவன் கண்ட காட்சியின்படி அவன் நடக்கவில்லை ; அவன் விசுவாசத்தினாலே, காணக்கூடாததின்படியே நடந்தான், அவனுக்கு ஏதோ ஒன்று சம்பவித்தது.  55. ஆகவே கவனியுங்கள், ஒரு மனிதனுக்கு தராசிலே வைக்கப்பட்ட போது ..... அந்த விதமான தருணத்தை இன்றிரவு உங்களில் யாரும் கொண்டிருக்கவில்லை. ஆனால், உங்களுக்கு அந்த தருணம் அளிக்கப்பட்டால் எந்த விதமான ஒரு தெரிந்து கொள்ளுதலை நீங்கள் செய்வீர்கள்? அங்கே உலகமானது அளிக்கக் கூடியதிலே சிறந்தது அளிக்கப்பட்டது. இங்கேயே மதமானது அளிக்ககூடியதிலே மிக மோசமானதை அளித்துக் கொண்டிருக்கின்றது. ஆனாலும் உலகம் அளிக்கும் சிறந்ததை விட, மதமானது அளிக்கும் மோசமானது அதிகமானதாக உள்ளது. ஆகவே மாம்ச பார்வையின்படியும், உலகப் பிரகாரமான சிந்தையின்படியான காரியங்களை விட்டு விட்டு கிறிஸ்துவை தங்கள் இருதயத்திற்குள்ளாக வரவேற்கும் எந்த ஒரு மனிதனோ அல்லது பெண்ணிற்கோ இன்றிரவு அது எப்படியிருக்கும். உலகம் அளிக்கும் எந்த ஒன்றைக் காட்டிலும் இது மிகச் சிறந்ததான ஒன்றாக இருக்கும். நித்திய ஜீவனை எதனால் மிஞ்ச முடியும்? எந்த ஒன்றாலும் முடியாது. அந்த தராசில் சமநிலையில் நிறுத்தப்பட்டிருப்பதை என்னால் காண முடிந்ததற்காக நான் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். நிச்சயமாக.  56. யோசுவாவைக் கவனியுங்கள். யோசுவாவைப் பாருங்கள்! எரிகோவின் மதில்களில் இருந்த கல் ஒன்று கூடவிழுவதற்கு முன்னதாகவே யோசுவா மதில்களைச் சுற்றி நடந்து ஜெயத்தை முழங்கினான். ஏனென்றால் விசுவாசத்தினாலே அவன் வெற்றியைக் கண்டான். அந்த மதில்கள் கீழே விழுந்துக் கொண்டிருக்கின்றன என்று அவன் அறிந்திருந்தான். அவன் தன்னுடைய மனிதருக்கு ஆயுதம் தரிவித்து, முழு ஆயுதத்துடனே அந்த எரிகோவை சுற்றி, சுற்றி, சுற்றி, ஏழு நாட்களுக்கு நடந்தான். எது அவ்வாறு செய்யச் செய்தது? ஏனென்றால் அவன் காணக்கூடாததை நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்ததால், அது தேவன் அளித்த ஒரு வாக்குத்தத்தமாகும். சங்கீதம் 103 : 3  57. எவ்வளவு நாள் சக்கர நாற்காலியைச் சுற்றிலும் உங்களால் நடக்க முடியும்? புற்று நோயைச் சுற்றிலும் உங்களால் எவ்வளவு தான் நடக்க முடியும்? தேவன் வாக்குத்தத்தத்தை அளித்து விட்டார் என்று வெற்றியை முழங்கிக் கொண்டு எவ்வளவாக நீங்கள் பாவத்தைச் சுற்றிலும் நடக்க முடியும்? காணக்கூடாத அதரிசனமானவரை உங்களால் காண முடியும் போது, அந்த துடிப்பானது உங்கள் இருதயத்திற்குள்ளாக வரும் போது அது "உன் நோய்களையெல்லாம் குணமாக்குகிற கர்த்தர் நான்” என்று துடிக்க ஆரம்பிக்கும், உங்களால் அதைக் காணக்கூடும் போது நோயின் காரியங்களெல்லாவற்றிற்கும் வேகம் தளர்ந்து விட ஆரம்பிக்கும்.  58. யோசுவா காணக்கூடாததை நோக்கிப் பார்த்து, அது நிச்சயமாக நிகழ்ந்தேறும் என்று விசுவாசித்துக் கொண்டு மதில்களைச் சுற்றிலும் நடந்தான். நீங்கள் எதை நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களோ அதைச் சார்ந்துதான் காரியங்கள் இருக்கின்றன. அவர்கள் தானியேலிடம் “சிங்கங்களின் கெபி உனக்காகத் தயாராக உள்ளது” என்று கூறினபோது, தானியேல் காணக்கூடாததை நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்து, அக்கினியின் தூதன் ஒருவன் அவனுக்கும் சிங்கங்களுக்கும் நடுவே நிற்கப் போகின்றான் என்று அறிந்திருந்தான். இஸ்ரவேலின் பிள்ளைகளை வழிநடத்தின அதே அக்கினி ஸ்தம்பம் - ஏனெனில் நினைவில் கொள்ளுங்கள். ஒரு மிருகம் அக்கினிக்குப் பயப்படும். அந்த அக்கினி ஸ்தம்பமானது தானியேலுக்கும் சிங்கங்களுக்கும் நடுவே நின்றபோது அந்த சிங்கங்கள் தூர நின்று பூனைக்குட்டிகளைப் போன்று மியாவ் என்று சத்தமிட்டு அப்படியே படுத்துக் கொண்டன. விசுவாசத்தினாலே, காணக்கூடாததினாலே, தானியேல் சிங்கத்திற்கு பயப்படவேயில்லை. தானியேல் 3 : 17  59. எபிரெய பிள்ளைகள் தங்கள் மதத்தை வெளிப் படையாக மறுதலிக்கவும், தங்கள் இயற்கைக்கும் மேம்பட்ட தங்களின் தேவனை மறுதலிக்கவும் செய்து குளிர்ந்து போன அசைவற்றிருக்கும் ஒரு தேவனைவிசுவாசித்துத்தானாக வேண்டும் என்ற ஒரு சூழ்நிலையில் இருக்கையில், விசுவாசத்தினாலே எரிகின்ற அக்கினி சூளையில் இருந்த அந்த நான்காவது மனிதனைக் கண்டார்கள். நிச்சயமாக அவர்கள் கண்டார்கள். அவர்கள், “நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன் இந்த எரிகிற அக்கினிசூளையிலிருந்து எங்களைத் தப்புவிக்க வல்லவ ராயிருக்கிறார்" என்று கூறினர். அவர்கள் என்ன செய்தனர்? காணக்கூடாததை அவர்கள் கண்டனர். எரிகிற அக்கினிச் சூளையை அவர்கள் முன் இருப்பதைக் கண்டனர். அதற்குள்ளாக நான்காவது மனிதன் நின்று கொண்டு அந்த அக்கினி ஜூவாலைகள் அவர்களிடம் வராதபடிக்கு விசிறிக் கொண்டிருப்பதை அவர்கள் கண்டனர். ஆகவே அவர்கள் அந்த எரிகிற அக்கினி சூளைக்கு பயப்படவேயில்லை.  60. எந்த ஒரு ஆணோ, அல்லது பெண்ணோ சரி, நீங்கள் அம்மா என்ன சொல்வார்களென்றும், அப்பா என்ன சொல்வாரென்றும் மேய்ப்பர் என்ன சொல்வாரென்றும், இன்னார் - இன்னார் என்ன சொல்வார்கள் என்றும் பயப்படுவீர்களானால் இன்னுமாக நீங்கள் பயங்கொண்டு உங்கள் கண்களினால் காண்கின்ற காரியங்களுக்கு பின்னால் தான் நீங்கள் நடந்து கொண்டிருக்கின்றீர்கள் என்பதாகும். ஆனால் அவ்விதமாகக் காண்பதை சற்று மங்கச் செய்வீர்களானால் -- லாட்டரி போன்ற சூதாட்ட விளையாட்டு விளையாடும் குழு என்ன சொல்லும் என்றும், சினிமா செல்லும் குழு என்ன சொல்லுமென்றும், உங்கள் வட்டத்திலிருக்கும் உங்களுடன் தொடர்புடைய பெண்கள் என்ன கூறுவார்களென்றும், நீங்கள் அந்த ராக் அண்டு ரோல் இசையை விடும் போது அவர்கள் உங்களை பழமை நாகரீக ஆள் என்று கூறும் போது அதைக் குறித்து எண்ணாமல் இருப்பீர்களானால் . . . நீங்கள் அதைக் காண முனைவீர்களானால் நீங்கள் இன்னுமாக மாம்சத்தில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். ஆனால் தேவன் அந்த கட்டுப்பாடு கோபுர அறைக்குள் வரும் போது அப்பொழுது நீங்கள் அவரை நோக்கிப் பார்ப்பீர்கள். இராஜாவின் கட்டளைகளானாலும் அதற்கு நீங்கள் பயப்பட மாட்டீர்கள், நிச்சயமாக பயப்படமாட்டீர்கள். 61. ஒரு பறவையின் கண்ணை ஒரு பாம்பானது கவர்ந்திழுக்கும் போது அப்பொழுது அந்த பறவையை அந்தப் பாம்பு தன்னுடைய நேரடியான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடும் என்று என்னிடமாகக் கூறப்பட்டது. அந்த பாம்பு அந்தப் பறவையை அது தங்கியிருக்கும் கிளையிலிருந்து தன்னிடமாக வரவழைத்து தன் மீது சுற்றி சுற்றிப் பறந்து நேராக தன்னுடைய வாய்க்குள்ளாக வரும்படிக்குச் செய்யும். ஒரு பாம்பின் கண்களானது மிகுந்த சக்தி வாய்ந்தது என்றும், அது ஒரு பறவையின் கண்ணை நோக்கி நேராகப் பார்க்கும் போது அது பறவையை வசியப்படுத்தி அதைக் கவர்ந்து இழுத்து நேராக தன்னிடமாக வரும்படிக்குச் செய்யும் என்று என்னிடமாகக் கூறப்பட்டது. அந்த சிறு பறவையானது சிறகுகளை அடித்து பறந்து நேராகக் கீழே வரும் என்றும், அப்படியாக அது வருகையில் அது பாம்பின் கண் பார்வையிலிருந்து தன் கண்ணை அகற்றி தன் தலையை அசைத்து சீக்கிரமாக மேல் நோக்கிப் பார்க்க ஆரம்பிக்கவில்லையெனில் அது பாம்பின் வசியப் பார்வையிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முடியாது என்று அவர்கள் கூறினர். அவ்வாறு மேல் நோக்கிப் பார்த்தால் தான் அது தன்னை விடுவித்துக் கொள்ள இருக்கும் ஒரே வழியாகும்.  62. இன்றிரவும் கூட இந்த தேசத்தின் சிறு பறவைகள் சிலவற்றிற்கு அந்த விதமாகத் தான் இருக்கின்றது. “சபையைச் சேர்ந்து கொண்டால் மாத்திரம் போதுமானதாகும், அற்புதங்களின் நாட்கள் கடந்து விட்டன” என்று கூறி ஒரு சமுதாய சுவிசேஷத்தினால் அவர்கள் கவர்ந்திழுக்கப்பட்டு, வசியப்படுகிறார்கள். அப்பொழுது நீங்கள் செய்ய வேண்டிய ஒரே வழி என்னவென்றால் உங்கள் சிறகுகளை அடித்து சீக்கிரமாக மேல் நோக்கி எழுந்து இயேசுவைப் பார்த்தல் ஆகும். உலகத்தின் காரியங்களை நோக்கிப் பார்த்தல் அல்ல. உங்களை கவர்ந்திழுக்கும் பெரிய பெரிய இடங்கள், சமுதாயங்கள் மற்றும் பிற காரியங்களை நோக்கிப் பார்க்காதீர்கள், ஆனால் மேல் நோக்கி இயேசுவைப் பாருங்கள். சீக்கிரம் உங்கள் சிறகுகளை அடித்து அதினின்று பறந்து வெளியே சென்று விடுங்கள்! உங்கள் மேல் இருக்கும் அந்த தூசியை உதறி தட்டி விட்டு பழமையான வழியைக் கேளுங்கள். ஏனெனில் அதில் தான் ஜீவன் இருக்கின்றது.  63. இங்கே பார்ஸ்டோவ் ஃபீல்டில் இருக்கும் போது இது என்னிடமாகக் கூறப்பட்டது (அதன் பெயர் அது தான் என்று நான் நினைக்கின்றேன். அங்கே தான் அவர்கள் பெரிய ஜெட் விமானங்களை வைத்திருக்கிறார்கள்), ஒரு ஜெட் விமானம் பறக்கும் போது ஒரு குறிப்பிட்ட வேகத்தை அடையும் போது அப்பொழுது அது ஒலித்தடையைத் (sound barrier) தொடுகின்றது. மேலும் அவர்கள் கூறினது என்னவென்றால் அந்த ஒலித்தடையைத் தொட்டு அதினூடாக செல்ல ஆரம்பிக்கையில் அசைந்து குலுங்க ஆரம்பிக்கும். அப்பொழுது விமானத்தின் இறக்கைகள் கிழிந்து விழும் அளவிற்கு, அதனுடைய போல்ட் நட்டுகள் பிய்த்துக் கொண்டு வெளியே வந்து விடும் அளவிற்கு அசைந்து குலுங்கி அந்த ஒலித்தடைக்குள்ளாகச் செல்லும். ஆனால் அந்த ஒலித்தடையைக் கடந்து வெளியே வந்த பிறகு அப்பொழுது அந்த விமானத்தால் அவ்வளவாக வேகமாகவும் செல்லமுடியும். அந்த விமானத்தால் எந்த ஒரு சிக்கலுமில்லாமல் சீராகப் பறக்க முடியும்.  64. ஆகவே இன்றிரவு இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கும் நீங்களும் மற்றும் சபையும், ஓ, நீங்கள் மிகவுமாக குலுங்கி அங்கலாய்த்து தவித்துக் கொண்டிருக்கிறீர்கள், தேவனோ உங்களை இழுத்து காரியங்களை உங்களுக்குக் காண்பித்துக் கொண்டிருக்கின்றார். நீங்கள் மாத்திரம் அந்த அவிசுவாசம் என்னும் பாவத்தடையைத் (sin barrier) தாண்டுவீர்களானால், நீங்கள் அந்த ஒலித்தடையைத் தாண்டிச் செல்லும் போது, அவிசுவாசம் என்னும் பாவ ஒலித்தடையை தாண்டிச்செல்லும் போது, அப்பொழுது அமெரிக்க ஐக்கிய நாட்டில் எல்லாவிடங் களிலும் அளவற்ற எழுப்புதல் வெடித்து எழும்பும். “ஓ அது உண்மை தானா? அது என்னைக் குறிக்கின்றதா? நான் சுகமாக்கப்பட முடியுமா? நான் இரட்சிக்கப்பட முடியுமா? நான் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட முடியுமா?" அதை தாண்டிச் செல்லுங்கள். கடும் முயற்சி, முயற்சி, முயற்சி செய்து அந்தத் தடையை உடைத்து வெளியே வரும் வரைக்கும் பிரயாசப் படுங்கள் அப்பொழுது பரிசுத்த ஆவி உங்கள் மீது வரும். நான் உங்களுக்குக் கூறுகிறேன், அந்த தடையை நீங்கள் கடந்து அதற்கப்பால் செல்லும் போது அப்பொழுது நீங்கள் எந்த தடையும் இல்லாமல் செல்லத்தக்கதாக உங்களுக்கு மிகுந்த விசாலமான ஒரு இடம் இருக்கும். எபி. 2:8,9 வெளி. 22:17  65. வேதாகமம், “எல்லா காரியங்களையும் நாம் காண்பதில்லை, நாம் இயேசுவையே காண்கிறோம்” என்று கூறுகிறது. அவரைத்தான் நான் காண விரும்புகிறேன். நான் அவரைக்காணவிரும்புகிறேன். எப்படி நான் அவரைக்காண்கிறேன்? அவருடைய வாக்குத்தத்தங்களின் நிறைவேறுதலினாலே. விருப்பமுள்ளவன் யாராயிருந்தாலும் ஜீவத்தண்ணீரை வந்து இலவசமாய்ப் பருகக்கடவன் என்று அவர் வாக்குரைத் திருக்கின்றார். நீதாகமாயிருந்தால் வரலாம். கேட்கிறவனும் வா என்பானாக, வரவிரும்புகிறவர் எல்லாரும் - யாராயிருந்தாலும் சரி, விருப்பமுள்ளவன். அவர் "வில்லியம் பிரன்ஹாம்” என்று கூறுவதைக் காட்டிலும் “யாராயிருந்தாலும்” என்று அவர் கூறும்படிக்கே நான் விரும்புவேன். இன்னும் அநேக வில்லியம் பிரன்ஹாம்கள் இருக்கக்கூடும் ஆனால் அவர் "யாராயிருந்தாலும்" என்று அவர் கூறும்போது அவர் என்னையும் குறிப்பிட்டார் என்று எனக்குத் தெரியும். அது எனக்கும் ஒரு தருணத்தை அளிக்கின்றது. விருப்பமுள்ளவன் ஜீவத் தண்ணீரை பருகக்கடவன். தேவன் உள்ளே வருகின்றார். மத்.16:24  66. நீங்கள் மரித்துக் கொண்டிருக்கிறீர்கள், மருத்துவர்கள் தங்களால் எதுவும் செய்ய முடியாது என்று கைவிட்டு விட்டார்கள். ஒருக்கால் உலகமும் கூட உங்களைக் கைவிட்டிருக்கக்கூடும். ஒருக்கால் சபையும் கூட உங்களை கைவிட்டிருக்கக்கூடும், ஆனால் இயேசு உங்களை கைவிடவேயில்லை. "ஒருவன் தன்னைத் தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக் கொண்டு என்னை பின்பற்றக்கடவன்.'' நீங்கள் என்ன நினைக்கின்றீர்களோ அதை மறுதலியுங்கள். உங்கள் மனக்கருத்தை மறுதலியுங்கள். தேவனுடைய வார்த்தை என்ன கூறுகின்றதோ அது சத்தியம் என்று விசுவாசிக்க மாத்திரம் செய்து அதனோடு கூட அப்படியே அணிவகுத்துச் செல்லுங்கள்! தொடர்ந்து சென்று கொண்டிருங்கள். இன்னும் வியாதி அதிகமாகிறதா, அப்படியே சென்று கொண்டிருங்கள், தொடர்ந்து வார்த்தையுடன் சென்று கொண்டிருங்கள். அதன்பிறகு நீங்கள் அந்த தடைகளை உடைத்துக் கொண்டு செல்வீர்கள் ; அப்பொழுது நீங்கள் விடுதலையாவீர்கள், அப்பொழுது உங்களால் அவரைக் காண முடியும், அப்பொழுது அவர் தம்மைத்தாமே உங்களுக்கு வெளிப் படுத்துவார், வாக்குத்தத்தத்தை செய்த அந்த மனுஷக்குமாரன் அப்பொழுது உங்களுக்கு தத்ரூபமாவார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? இப்பொழுது சிறிது நேரத்திற்கு ஜெபத்திற்காக நம்முடைய தலைகளைத் தாழ்த்துவோமாக.  67. துதித்தலுக்குரிய கர்த்தாவே, ஓ, உம்மைக்குறித்து பேச எவ்வளவாக நாங்கள் விரும்புகிறோம் கர்த்தாவே, இன்றிரவு நாங்கள் பேசிக்கொண்டிருக்கின்ற இந்த மக்கள் குழுவை என்றாவது ஒரு நாளிலே நீல வானத்திற்கு அப்பாலே நாங்கள் இவர்களை மறுபடியுமாக சந்திப்போம் என்பதை அறிந்திருக் கின்றோம். தேவன் தாமே கட்டி உண்டாக்கின அந்த நகரத்தை நாம் தட்டும் போது நாம் தேவனுடைய ஆசீர்வாதங்களை உணர்ந்து மகிழ்வோம். அந்த நகரத்திலே நோயாளிகளை ஏற்றி செல்லும் ஆம்புலன்ஸ் வண்டிகள் இருக்காது. அந்த நகரத்திற்கு வெளியே கல்லறைகள் இருக்காது. அந்த நகரத்திலே அடக்க ஆராதனை பிரசங்கமானது இருக்கவே இருக்காது. அந்த நகரத்திலே பாவமென்பது இருக்காது. ஏனெனில் பாவம் அந்த இடத்தில் நுழையவே முடியாது. அந்த நகரத்தில் வியாதியென்பதே இருக்காது ; அந்த நகரத்திற்கு மருத்துவர்களோ அல்லது மருந்துகளோ தேவையில்லை. நாம் அவருடைய சாயலிலே ஜீவித்து, அவருடைய ரூபத்தின்படியே உருவாக்கப்பட்டு அவருடைய மகிமைக்கு ஒப்பாயிருந்து என்றென்றுமாக அவருடன் கூட இருக்கப்போகின்றோம். ஓ தேவனே, மனிதரும் பெண்களும் இவ்விதமானதை எப்படி ஏற்றுக்கொள்ளாமல் புறக்கணிக்க முடியும்? கர்த்தாவே, அவர்கள் தாமே இன்றிரவு நோக்கிப்பார்த்து, தங்களுடைய மாம்சப்பிரகாரமான யோசனையிலிருந்து அகன்று சென்று பரிசுத்த ஆவி தாமே தங்களுடைய இருதயங்களிலே வர அனுமதித்து அது அவர்களுக்கு ஒரு புதிய காட்சி நிலையை அளித்து அதனாலே தான் அவர்கள் காணக்கூடாததை நோக்கிப் பார்க்க ஏதுவாயிருக்கத்தக்கதாக நாங்கள் ஜெபிக்கின்றோம். மத். 25:34  68. இன்றிரவு நாங்கள் இந்த கடைசி காலத்தைப் பார்க்கின்றோம். அங்கே அதோ தொலைவிலே ஒரு குண்டு இருப்பதை நான் காண்கிறேன். வானம் அக்கினியினால் எரிவதையும் பூமியானது உயர் வெப்பத்தினால் எரிவதையும் நான் காண்கிறேன். மக்கள் இங்கே தெருக்களில் கூச்சலிட்டுக் கொண்டும் அழுதுக்கொண்டும் ஓடுவதையும் நான் காண்கிறேன். ஆனால் மிகவும் காலதாமதமாகிவிட்டது. நோவா பிரசங்கித்து விசுவாசித்தது போன்றுதான் - அப்பொழுது மிகவும் காலதாமதமாகிவிட்டிருக்கும், கர்த்தாவே, ஓ தேவனே எங்களால் அதற்கப்பாலே காணமுடிகிறதற்காக நான் மிகவும் மகிழ்ச்சி கொள்கிறேன் ; இயேசு தம்முடைய வெள்ளை சிங்காசனத்தின் மீது தம்முடைய ஆயிரமாயிரக்கணக்கான பரிசுத்தவான்களுடன் கூட வந்து உலகம் உண்டானது முதல் உங்களுக்காக ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிற கர்த்தருடைய ஆசீர்வாதங்களுக்குள் பிரவேசியுங்கள்” என்று கூறுவார். கர்த்தாவே, மக்களுக்கு அந்த வழியை நோக்கிக் காண்பிக்க எங்களால் முடிகின்றதே, அதற்காக மிகவும் மகிழ்ச்சியுறு கிறோம். அவர்கள் தாமே இன்றிரவு தங்கள் பாவங்களை விட்டுவிட்டு உம்மை பின்பற்றுவார்களாக.  69. நாம் நம்முடைய தலைகளை தாழ்த்திருக்கையில் மற்றும் ஒவ்வொரு இருதயமும் ஜெபித்துக் கொண்டிருக்கையில் இன்றிரவு இங்கு குழுமியுள்ள மக்கள் கூட்டத்தில் இருப்பவர்களில் எத்தனைப் பேர், “கர்த்தராகிய இயேசுவே, நான் இந்த உலகத்தின் காரியங்கள் மிகவுமாக நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று நான் நம்புகிறேன். ஒருக்கால் நீர் என் இருதயத்தில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்க வேண்டுமே அவ்விதமாக ஒருவேளை இல்லாமலிருக்கக்கூடும். கர்த்தாவே நீர் எனக்குத் தேவை” என்று சொல்லக்கூடும். அமைதியாக அவரை நோக்கி உங்கள் கையை உயர்த்துவீர்களா? தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அது அருமையானது. மிக உத்தமமாக இருங்கள். “சகோதரன் பிரன்ஹாம், நீர் உண்மையைத் தான் கூறுகிறீர்கள் என்று நான் முற்றிலுமாக நம்பலாமா?'' என்று கூறுகிறீர்களா, சரி, உங்களால் என்னை நம்பமுடியவில்லையெனில் வார்த்தையை நம்புங்கள். யோவான் 3:3  70. கர்த்தர் இங்கே இருக்கின்றார், அவர் அழைத்துக் கொண்டிருக்கின்றார். இயேசு இப்பொழுது உங்களை நோக்கி மிருதுவாக அழைத்துக் கொண்டிருக்கின்றார். ஏவாளுக்கு இருந்தது போல, ஆதாமுக்கு இருந்தது போல, ஒரு தெரிந்து கொள்ளுதலை செய்யத்தக்கதாக உங்களுக்கு ஒரு தருணமானது இருக்கின்றது. இப்பொழுது நீங்கள் எதையும் தெரிந்து கொள்ளும் உரிமையைப் பெற்றுள்ள ஒரு நபர் ; நீங்கள் உங்கள் தெரிந்து கொள்ளுதலை செய்து கொள்ளலாம். உங்கள் நித்தியத்தை எங்கு கழிக்கப் போகிறீர்கள்? ஒரு மனிதன் மறுபடியும் பிறவாவிட்டால் அவன் இழக்கப்பட்ட ஒருவன் ஆவான். நீங்கள் மறுபடியும் பிறந்துள்ளீர்களா? அப்படி இல்லையெனில் உங்கள் கரத்தை உயர்த்தி “சகோதரன் பிரன்ஹாமே, எனக்காக ஜெபியுங்கள், உங்கள் ஜெபங்களை சரியாக இந்நேரமே நான் வாஞ்சிக்கிறேன்” என்று கூறுங்கள். அது சரி. இங்கே கீழ்தளத்தில் இருக்கும் எல்லாரும், அரங்கின் மாடி இருக்கை வரிசையில் உள்ள எல்லாரும், அது அருமையானது. உங்கள் கரத்தை உயர்த்துங்கள், உத்தமமாயிருங்கள். நண்பர்களே நீங்கள் சிறிதளவு உத்தமத்தைக் கூட உடையவர்களாக இருங்கள்.  71. வாரக்கடைசியில் . . . அல்லது வருகின்ற அடுத்த வாரத்தில், இந்த காரியங்களில் பேரில், இந்த மந்தத்தைக் (dullness) குறித்தும், இந்த உலகமானது தன்னுடைய விஷத்தன்மையான சுவாசத்தை அந்த மக்களின் முகத்திற்குள்ளாக எப்படி ஊதியுள்ளது என்பதை குறித்தும் நான் அதிகமாக பிரசங்கிக்கப் போகிறேன். அது மக்களை வஞ்சித்துள்ளது. அநேக மக்கள் தாங்கள் கிறிஸ்தவர்களாக இல்லாதிருக்கையில், நாங்கள் கிறிஸ்தவர்கள் என்று நினைத்துக் கொண்டிருக் கின்றனர். மக்கள் அங்கே அடையப் போகும் ஏமாற்றங்களைக் குறித்து இயேசு கூறியுள்ளார். நண்பனே, வாய்ப்பை நழுவ விடாதே, உனக்கு வேறொரு வாய்ப்பு கிடையாது ; இருக்கின்ற வாய்ப்பு இது ஒன்றே ஒன்று தான். ஒருக்கால் உன் கரத்தை இன்றிரவு தேவனுக்கு நேராக உயர்த்துவதே வித்தியாசத்தை குறிக்கலாம். நாம் ஜெபிப்பதற்கு முன்னர் நீங்கள் கரத்தை உயர்த்துவீர்களா? கரத்தை உயர்த்தாதவர்கள் வேறு யாராவது உள்ளனரா? அங்கே கடைசியில் உள்ளவர்களே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நாங்கள் அரங்கத்தின் மேற்பகுதியின் வழியாக உங்களை நாங்கள் காண்கிறோம். நீங்கள் மிகவுமாக அப்பாலே இருக்கிறீர்கள் என்று நினைக்க வேண்டாம் ; நீங்கள் தூரமாக இல்லவே இல்லை. நீங்கள் சரியாக எங்கே இருக்கிறீர்கள் என்பதை அவர் அறிவார். 72. நாம் காணக்கூடாத காரியங்களை நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். நீங்கள், "சரி, நான் மறுபடியும் பிறந்த கிறிஸ்தவனாக ஆவதற்கு இப்பொழுது என்ன செய்ய வேண்டும்? என் முதலாளி என்ன கூறுவார்?". என்கிறீர்கள். நீ அப்படியாக செய்யாவிட்டால் உங்கள் கர்த்தர் என்ன சொல்லுவார் என்று நினைத்துப் பாருங்கள். யார் மகத்தானவர்? உன் முதலாளியா? அடுத்த வாரமே நீங்கள் அவரை கல்லறையில் அடக்கம் செய்யக்கூடும். இந்த நேரத்திலே அவர் மரித்துப் போயிருப்பார், ஆனால் உங்கள் இயேசுவோ என்றென்றும் உயிரோடிருப்பார். நீங்கள் நரகத்தில் இருந்து பிசாசினால் கடும் சித்திரவதைக்குட்பட்டு . ... ..... உங்களைச் சுற்றிலும் தீய ஆவிகள் சூழ்ந்து கொண்டு உங்களை ஓயாமல் வட்டமிட்டுக் கொண்டு, நீங்கள் தேவனிடமிருந்து என்றென்றுமாக பிரிக்கப்பட்டு, எந்த ஒரு நம்பிக்கையும் இல்லாமல் இருப்பதை சற்று நினைத்துப் பாருங்கள் - அதை குறித்து என்ன? நாளைக் காலை சூரியன் உதிப்பதற்கு முன்னர் ஒருக்கால் நீங்கள் அந்த இடத்தில் இருக்கலாம். நண்பனே, நீ தயாராக இருப்பது நன்று. இதை ஒரு தமாஷாக, ஜோக்காக எடுத்துக் கொள்ள வேண்டாம். இதை ஒரு தொலைக்காட்சி நடிப்பைப் போன்று எடுத்துக் கொள்ள வேண்டாம். நினைவில் கொள், இது ஒருக்காலும் அழியாத தேவனுடைய நித்திய வார்த்தையாகிய சுவிசேஷமாகும்.  73. இன்றிரவு நான் இங்கே தெருவில் வந்து கொண்டிருந்த போது ஒரு விபத்தில் நசுங்கிப்போயிருந்த ஒரு வாலிப மனிதன் தெருவிலிருந்து தூக்கிச் செல்லப்பட்டதை நான் கண்டேன். அவன் ஓட்டி வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து வேறொரு காரின் மீது மோதினது. அவனிலிருந்து இரத்தம் பெருக்கெடுத்து ஓடினது. அவசர ஊர்தியில் அவனை எடுத்து கிடத்திக் கொண்டிருந்தனர். அந்தப் பையன் வாய்ப் பிளந்தவனாக அங்கே கிடந்தான், அவனுடைய கண்களிலிருந்தும் காதுகளிலிருந்தும் இரத்தம் வெளிவந்துக் கொண்டிருந்தது. அவனின் மீது ஒரு போர்வையைப் போர்த்தி அவன் முகத்தை மூடி அவசர ஊர்தியில் தூக்கிப் போட்டனர். நான் அங்கே நின்று “ஓ தேவனே, அந்த பையன் என் கூட்டத்தில் பங்கெடுத்திருப்பானா? நான் அதிக நேரமாக வற்புறுத்தினேனா? அவன் இயேசுவை அறிந்திருந்தானா? எல்லாம் இப்பொழுது முடிந்து விட்டதே'' என்று நினைத்தேன்.  74. நண்பனே, அந்த தருணத்தை இப்பொழுது நான் அளிக்கின்றேன். இந்த பூமிக்குரிய காரியங்களைக் குறித்து நினைக்காதே, நாளைய தினத்தைக் குறித்து சிந்திக்காதே ; நாளைய தினமானது அதற்குரியதைப் பார்த்துக் கொள்ளும். இயேசு இப்பொழுது அருகாமையில் இருக்கும் போது, இன்று குறித்து இப்பொழுது நாம் சிந்திப்போமாக. எல்லாக் காரியங்களையும் நம்மால் காணக்கூடாமல் இருக்கலாம். ஆனால் மனிதனுடைய பாவத்தை எடுக்கத்தக்கதாகவும், மனிதர் நம்முடைய பிதாவாகிய தேவனிடமாக ஒப்புரவாகத் தக்கதாக மனிதனுடைய சாயலிலே உண்டாக்கப்பட்ட இயேசுவை நாம் காண்கிறோம். நான் ஜெபிப்பதற்கு முன்னதாக ஜெபிக்கப்பட விரும்பி தங்கள் கரங்களை உயர்த்த விரும்புகிறவர்கள் இவ்வளவு பேர்கள் தானா? ஐயா, இங்கே உள்ளவரே, ஐயா, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. சக்கர நாற்காலியில் இருக்கும் நீங்கள், ஐயா, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நீங்கள் கொண்டிருக்கும் இந்த அணுகுமுறைக்காக தேவன் இன்றிரவு உங்கள் ஜெபத்தை நிச்சயமாகக் கேட்பார். ஐயா, அது நிச்சயம் என்றே நான் கூறுகிறேன். யோவான் 6:37  75. கர்த்தாவே, ஆராதனையின் முடிவிற்கு இது வந்துள்ளது, அநேககரங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. இங்கே சக்கர நாற்காலியில் முடங்கிக் கிடக்கின்ற பரிதாபத்திற்குரிய நபர் இங்கே இருக்கின்றார் ; அவர் தன்னுடைய கரங்களை உயர்த்தியுள்ளார். அந்த விதமான ஒரு மனப்பான்மைக்கு நிச்சயமாக நீர் செவிகொடுப்பீர். ஆகவே, ஓ கர்த்தாவே, இங்கே கட்டடம் முழுவதுமாக மற்ற மக்களும் உள்ளனர். ஒருக்கால் இருதயக்கோளாறுடன் இருப்பர். எப்படி தங்களால் சுகமாக முடியும் என்று காணக்கூட இயலாத நிலையில் ஏதாவதொரு விதத்தில் மிகவுமாக வியாதிப்பட்டு இருப்பார்கள். ஆனால், "என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை” என்பதை தேவனே நீர் நினைவில் கொண்டிருப்பீர் என்று நாங்கள் ஜெபிக்கின்றோம். ஆகவே ஒருக்கால் அவர்களுடைய பாவங்கள் உடைக்கப்பட்டு சுக்குநூறாக சிதறடிக்கப் படுதலானது அவர்களுடைய வியாதிகளை எடுத்துப் போடும், ஏனென்றால் வியாதியானது பாவத்தின் தன்மை என்றும் பாவம் தான் வியாதியைக் கொண்டு வந்தது என்றும் நாங்கள் உணர்ந்து கொள்ளுகின்றோம்.  76. பிதாவே, தங்கள் கரங்களை உயர்த்தியுள்ள இந்த மக்களை நீர் ஆசீர்வதிக்குமாறு நாங்கள் ஜெபிக்கின்றோம். இங்கே மக்கள் கூட்டத்தில் அவர்களில் அநேகர் தங்கள் கரத்தை உயர்த்தியுள்ளனர். நீர் தாமே அவர்களை இரட்சித்து இன்றிரவு முதற்கொண்டு அவர்கள் தாமே விசுவாசத்தினாலே நடந்து, பழைய ஏற்பாட்டின் ஆபிரகாமைப் போல இல்லாதவைகளை இருக்கிறவைகளைப் போல அழைக்கும் படியாகவும் நாங்கள் ஜெபிக்கிறோம். நாங்கள் ஆபிரகாமுடைய குமாரரும் குமாரத்திகளுமாக இருக்கிறோமென்றால் நாங்கள் அவருடைய ஆவியைக் கொண்டிருந்து தேவனுடைய வாக்குத் தத்தங்களை நாங்கள் விசுவாசிக்கிறோம். பிதாவே, இதை அருளும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தின் மூலமாக அவர்களுக்காக நான் ஜெபித்து அவர்களை உம்மிடமாக சமர்ப்பிக்கின்றேன். ஆமென்.  77. சற்று நேரம் உங்கள் இருக்கையில் அப்படியே அமர்ந்திருங்கள். நான் நீண்ட நேரம் எடுத்து விட்டேன். கடந்த இரவும் இன்றிரவும் என் வரையறுக்கப்பட்டதை விட அதிகமாக நான் நேரம் கடந்து சென்றுவிட்டேன். நான் வந்த போது நான் வியாதியஸ்தருக்காக மாத்திரமே ஜெபிக்க வேண்டியவனாக வந்தேன், வெள்ளிக்கிழமை ... அல்லது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை, திங்கள், செவ்வாய் மற்றும் புதன்கிழமை ... அல்லது திங்கள் மற்றும் செவ்வாய் அன்று பிரசங்க ஆராதனையாக இருக்க வேண்டியிருந்தது, புதன்கிழமை ஜெப ஆராதனையாக இருந்தது. வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமை அன்று மறுபடியுமாக பிரசங்க ஆராதனையாக இருந்தது. பிறகு ஞாயிறன்று சுகமளிக்கும் ஆராதனையாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அந்த விதமாகத் தான் ஒழுங்கு செய்யப்பட்டது. ஆனால் தேவையைப் பார்க்கும் போது, காரியத்தை செய்தாக வேண்டும் என்ற நிலை ஏற்பட்ட போது, நான் ஏறக்குறைய ஒவ்வொரு இரவும் வியாதியஸ்தருக்காக ஜெபித்து வந்தேன்.  78. கவனியுங்கள், என்னுடைய கூட்டங்களுக்கு முதல் தடவையாக வந்துள்ளவர் எத்தனைப்பேர் இங்கே இருக்கின்றீர்கள், உங்கள் கரங்களை சற்று உயர்த்துங்கள். ஏறக்குறைய இங்குள்ள கூட்டத்தில் பாதி மக்கள் என் கூட்டங்களுக்கு வந்ததே கிடையாது. எத்தனைப் பேர் வியாதியிலிருந்து தங்கள் சரீரங்களுக்காக ஜெபிக்கத்தக்கதாக எத்தனைப் பேர் இங்கே இருக்கிறீர்கள்? உங்கள் கரங்களை நீங்கள் உயர்த்த வேண்டு மென்று நான் விரும்புகிறேன். பாருங்கள், எல்லாவிடங்களிலும், எல்லாவிடங்களிலும் கரங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. ஓ, அருமையான சகோதரனே, சகோதரியே, தயவு செய்து நான் என்ன கூறினேனோ அதற்கு சற்று செவி கொடுங்கள். உங்கள் வியாதியை நோக்கிப் பார்க்காதீர்கள், நீங்கள் சுகமடையவே மாட்டீர்கள். உன்னுடைய வியாகுலத்தை நோக்கிப் பார்க்காதீர்கள். இயேசுவை நோக்கிப் பாருங்கள். நோக்கிப்பார்க்கப்பட வேண்டியவர் அவர்மாத்திரமே. நீங்கள் சகோதரன் பிரன்ஹாம், அவர் இங்கே இருக்கின்றார் என்று எனக்கு நிச்சயமாக கூறப்பட்டிருக்குமென்றால், அவர் இங்கே இருக்கின்றார் என்று நான் அறிந்திருப்பேனென்றால், ஒவ்வொரு வல்லமையிலும் அவரை நான் ஏற்றுக்கொள்ள விருப்பமுள்ளவனாக இருக்கிறேன்” என்று கூறுவீர்களானால் - அவ்விதமாக நீங்கள் செய்வீர்களா? உங்கள் கரங்களை உயர்த்துங்கள். அவர் இங்கே இருக்கின்றார் என்கின்ற நிச்சயத்தை உடையவர்களாக இருந்து அவரை நீங்கள் ஏற்றுக்கொள்ள விரும்புவீர்களானால் சற்று உங்கள் கரங்களை உயர்த்துங்கள். நீங்கள் கூறவேண்டிய தெல்லாம் என்னவென்றால், " அவர் இங்கே இருக்கின்றார் என்று முழு நிச்சயமாக நம்புகிறேன்” என்பதே தான். ஆம், அவர் இங்கே இருக்கிறாரென்றால் என்னவெல்லாம் செய்வார் தெரியுமா? யோவான் 12:21, ரோமர் 8:34, எபி.2:9  79. இப்பொழுது, வியாதியாயிருக்கின்ற நீங்கள் . . . இப்பொழுது நான் சற்று காத்திருந்து ... இன்னும் ஒரு நிமிடத்தில் பீட அழைப்பை செய்யப்போகின்றேன். ஆனால் நீங்கள் நிச்சயமுள்ளவர்களாக இருப்பீர்கள் என்பதற்காகத் தான், வேதாகமம் கூறியுள்ளது, அதிலிருந்து தான் மேற்கோளும் காட்டியுள்ளேன், அது எபிரெயர் புத்தகம் இரண்டாம் அதிகாரம், ஒன்பதாவது வசனம் என்று நான் நினைக்கின்றேன். “நாங்கள் இயேசுவைக் காண்கிறோம். ஐயா, இயேசுவைக் காண விரும்புகிறோம்" என்று அந்த சமயத்தில் வந்த கிரேக்கர்கள் கூறினர். அப்படியானால் இயேசு இங்கிருக்கிறாரென்றால் நீங்கள் இயேசுவைக் காண விரும்புவீர்களா? அவர் இங்கே பரிசுத்த ஆவியின் ரூபத்தில் இருக்கின்றார், அவர் தம்முடைய சபையினுள் கிரியை செய்து கொண்டிருக்கின்றார். இயேசு மாம்சசரீரத்தில் இங்கே பூமியில் இருந்த போது அந்த சரீரம் மேலே உயர்த்தப்பட்டு சர்வவல்லமையுள்ள தேவனுடைய வலது பாரிசத்திலிருந்து நம்முடைய அறிக்கைகளின் பேரில் வேண்டுதல் செய்கின்றார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? அதைத்தான் எபிரேயர் 3 கூறுகின்றது. அதுவே தான். அவர் தம்முடைய சபையை அபிஷேகிக்கத்தக்கதாக தமது பரிசுத்த ஆவியை திரும்பவும் அனுப்பி, இந்த சபையில் மக்களுக்கு தம்மை பிரதிநிதித்துவப் படுத்த வரங்களை வைத்துள்ளார். அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? ஆகவே அவருடைய ஊழியமானது தொடர்ந்து செய்யப்பட வேண்டியதாக இருக்கின்றது. யோவான் 1:42  80. அப்படியானால் இன்றிரவு நான் முழுமையாக வெளிப்படையாகக் கூறுவது என்னவென்றால் ஒவ்வொரு சந்ததிக்குமான கடைசி அடையாளம் என்னவென்றால் அந்த மேசியாவாகிய இயேசு கிறிஸ்து வெளிப்பட்டு, இங்கே பூமியில் தாம் இருந்த போது என்ன அடையாளங்கள் புரிந்தாரோ அந்த அதே அடையாளங்களைக் கொண்டு தம்முடைய மக்களுக்கு தம்மை தெரியப்படுத்துவதேயாகும். இது புதிதாக வந்துள்ளவர் களுக்கு, எவ்வாறு இயேசு தம்மை தாமே தெரியப்படுத்தினார்? ஒன்று யோவான் . . . பரிசுத்த யோவான் முதலாவது அதிகாரம், பேதுரு அவரிடமாக கொண்டு வரப்பட்டான். அவர் அவனை அறிந்திருந்தார். அவனுடைய பெயரை அழைத்தார், அதற்கு முன்னதாக அவனை அவர் கண்டதேயில்லை ; அவன் ஒரு மீனவனாக இருந்தான். அப்பொழுது அவர் அவனுடைய பெயர் சீமோன் என்றும் அவனுடைய தகப்பனுடைய பெயர் யோனா என்று அவனிடமாகக் கூறினார். அவர் தான் அந்த மேசியா என்ற பேதுரு விசுவாசித்தான், ஏனென்றால் மேசியா வரும் போது அவர் தேவன் - தீர்க்கதரிசியாக இருப்பார் என்று பேதுரு அறிந்திருந்தான். எத்தனைப்பேர் அதை விசுவாசிக்கிறீர்கள், “ஆமென்” என்று கூறுங்கள். உபாகமம் 18:15,18 யோவான் 1:45-49.  81. “உன் தேவனாகிய கர்த்தர் என்னைப் போல ஒரு தீர்க்கதரிசியை எழும்பப் பண்ணுவார்' என்று மோசே கூறினான். அவர் தேவன் - தீர்க்கதரிசியாயிருப்பார் என்று அவர்கள் அறிந்திருந்தனர். இயேசு சீமோன் பேதுருவிற்கு இதைச் செய்ததை பிலிப்பு கண்ட போது அவன் மனமாற்ற மடைந்தான், பிறகு அவன் சென்று நாத்தான்வேல் ஒரு மரத்தின் கீழாக ஜெபித்துக் கெண்டிருந்ததைக் கண்டு அவனை இயேசுவிடம் கொண்டு வந்தான். அவன் யார் என்பதை இயேசு அறிந்திருந்தார், அவன் எங்கிருந்தான் என்றும் கூட்டத்திற்கு வருவதற்கு முன்பு என்ன செய்துக் கொண்டிருந்தானென்றும் அவனிடம் கூறினார். அதற்கு நாத்தான்வேல் கூறினது என்ன? ''ரபீ, நீர் தேவனுடைய குமாரன்; நீர் இஸ்ரவேலின் ராஜா”. அதைத்தானே அவன் கூறினான்? பாருங்கள், அவர் தம்மை எதிர்ப்பார்த்துக் காத்திருந்த தம்முடைய சொந்த ஜனத்திற்கு வந்தார். சரி. அது யூதர்களை முத்தரித்தது. மத்.12:24, 32 மாற்கு 3:22, 29, லூக்கா 11:15 லூக்கா 12:10  82. அவர்களில் அநேகர், "அவன் குறி சொல்பவனாகிய பெயல்செபூல்,'' என்று கூறினர், அப்படிப்பட்டவர்கள் இன்றிரவு எங்கே உள்ளனர்? அது அவர்களைப் பொறுத்ததே. தேவனுடைய ஆவி ஒரு அசுத்த ஆவி என்று கூறுவது மன்னிக்க முடியாத ஒரு காரியமாகும் என்று இயேசு கூறினார் - சரியான ஒரு பகுத்தறிதல் அல்ல, அது தேவனுடைய சிங்காசனமானது இருதயத்தில் இல்லாதிருத்தலால் ஒரு நல்ல ஆவிக்கும் தவறான ஒரு ஆவிக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை அறிந்துக் கொள்ள முடியாதிருத்தலாகும்.  83. இப்பொழுது, பிறகு முதலாவதாக வருவது . . . பிறகு சமாரியர்கள் அவருக்காக எதிர்பார்த்து காத்திருந்தனர். அவரால் அவர்களை கடந்து செல்ல முடியவில்லை ; வரப்போகின்ற மேசியாவுக்காக அவர்கள் காத்திருந்தனர். அவர்கள் மேசியாவுக்காக காத்திருந்தனர் என்று எத்தனைப் பேர் விசுவாசிக்கிறீர்கள், அப்படியானால் “ஆமென்” என்று கூறுங்கள். ஆனால் புறஜாதிகளாகிய நாம் காத்திருக்கவில்லை , அப்படித்தானே? இல்லை, நாம் மேசியாவுக்காக காத்துக் கொண்டிருக்கவில்லை, அப்படித்தானே? அந்த காலத்தில் நாம் அஞ்ஞானிகளாக இருந்து விக்கிரகங்களை வழிபட்டுக் கொண்டிருந்தோம். ஆனால் சமாரியர்கள் அவருக்காக காத்திருந்தனர். ஆகவே அவர்கள் வந்தனர், அவர்கள் காண விரும்பினர் . . . அவர் அவர்களுக்கு மேசியாவின் அடையாளத்தை காண்பிக்க வேண்டியவராக இருந்தார். ஆதி. 18:13  84. அவர் மாம்ச சரீரத்தில் இருந்து நின்று ஆபிரகாமோடு பேசிக்கொண்டிருந்தபோது அவனுக்கு மேசியாவின் அடையாளத்தை அவர் காண்பித்தார். சாராளிடம் ... ஆபிரகாமிடம் "சாராள் ஏன் நகைத்தாள்”? என்று கூறினார், சாராள் இருந்த கூடாரம் அவருக்கு பின்புறமாக இருந்தது. அவர் தம்முடைய முதுகை கூடாரத்திற்கு நேராக திரும்பி நின்றிருந்தார் என்று வேதாகமம் கூறுகின்றது. அது சரிதானே? இச்சம்பவம் வானத்திலிருந்து அக்கினி விழுந்து சோதோமை பட்சிப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக நடந்தது.  85. அக்கினி இப்பொழுது வருகின்றதை உங்களால் காணமுடிகின்றதா? அது அங்கே தொங்கிக் கொண்டிருப்பதைக் காண முடிகின்றதா? இந்த எல்லா அமிலங்களும் மற்றும் பூமிக்கு வெளியே உள்ள காரியங்களும் உள்ளனவே. மற்றும் நிலவுக்குள்ளாகச் சென்று காரியங்கள் எப்படி இருக்கின்றது என்று ஆராய்ச்சி செய்ய முயல்கின்றனர். வருகின்ற நாட்களிலே அக்காரியமானது எரிக்கப்படும், மற்றும் என்ன ...... தப்பித்துக் கொள்ள ஒரு வழியும் இருக்காது. நிச்சயமாக, ஒரு வழியும் கூட இருக்காது. எல்லாக்காரியமும், ...... வானம் அக்கினியில் எரிந்துக் கொண்டிருக்கும். இந்த பூமியின் விளிம்பைச் சுற்றிலும் எரிமலை அமிலங்களும் மற்றும் காரியங்களும் இன்னும் பிறவும் தொங்கிக்கொண்டிருக்கின்றன. என்ன, விஞ்ஞானிகள் நள்ளிரவுக்கு ஒரு நிமிடம்தான் என்று கூறுகின்றனர். இங்கே நாமும் உட்கார்ந்து காத்திருந்து "கர்த்தாவே நீர் என்ன செய்யப்போகின்றீர்?” என்று கூறிக் கொண்டிருக்கிறோம். நண்பனே, அது சரியாக நம்மேலேயே உள்ளது! இப்பொழுது, இன்றிரவு நாம் ரேடியோ ஒலிப்பரப்பில் இல்லை. அதனால் தான் என்னால் முடிந்தவரை இது மிக அவசரமான ஒரு காரியம் என்று உங்களிடம் காண்பிக்க நான் முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். யோவான் 4:7  86. கவனியுங்கள். பிறகு அவர் சமாரியாவிற்கு சென்று ஒரு ஸ்திரீயைக் கண்டார். அப்பொழுது அவர் அவளிடம், "தாகத்துக்குத்தா ...... " என்று கூறினார். யோவான் 4:9  87. "அவ்விதம் கேட்பது மரபல்லவே ; இங்கே சமூக இன வேறுபாடு வழக்கம் கடைபிடிக்கப்படுகிறதே” என்று அவள் திரும்பிக் கூறினாள். யோவான் 4:16  88. அதன் பிறகு அவர் அவளிடத்தில் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார், பிறகு அவளை நோக்கி, “நீ போய் உன் புருஷனை இங்கே அழைத்துக் கொண்டு வா” என்று கூறினார். யோவான் 4:17  89. அதற்கு அவள், “எனக்குப் புருஷன் இல்லை ” என்றாள். யோவான் 4:18  90. அவர், "அது சரியே, ஐந்து புருஷர்கள் உனக்கிருந்தார்கள். இப்பொழுதும் நீ யாருடன் வாழ்ந்து கொண்டிருக்கிறாயோ அவனும் உனக்குப் புருஷனல்ல” என்று கூறினார். யோவான் 4:19,25  91. இப்பொழுது, புதிதாக வந்துள்ளவர்களே அந்த சமாரியா ஸ்திரீ என்ன கூறினாளென்று சற்று கவனியுங்கள். அந்த ஆசாரியனும் பிரசங்கியும் கூறினது போல அவர் ஒரு பெயல்செபூல் என்றும் குறி சொல்பவன் என்றும் அவள் கூறவேயில்லை . அவள் "ஐயா, நீர் தீர்க்கதரிசி என்று நான் காண்கிறேன். மேசியா வரும் போது இந்த எல்லா காரியங்களையும் நமக்கு அறிவிப்பார் என்று நாங்கள் அறிந்துள்ளோம்” என்று கூறினாள். பாருங்கள். மேசியாவின் அடையாளம் எந்தவிதமாக இருக்கும் என்பதை அறிந்து கொள்ளும்படிக்கு அவர்களுக்கு போதிக்கப்பட்டிருந்தது. அவள், “மேசியாவை அறிவோம், அவர் வரும் போது எங்களுக்கு அறிவிப்பார், ஆனால் நீ யார்?” என்று கூறினாள். யோவான் 4:26  92. “உன்னுடனே பேசுகிற நானே அவர்” என்று அவர் கூறினார். யோவான் 4:29  93. அப்பொழுது அவள் ஊருக்குள்ளே ஓடிப்போய், “நான் செய்த எல்லாவற்றையும் ஒரு மனுஷன் எனக்குச் சொன்னார் ; அவரை வந்து பாருங்கள். அவர் மேசியாதானோ?” என்று கூறினாள். சகரியா 14:7, II தீமோத்தேயு 3:5  94. இப்பொழுது அந்த அதே இயேசு இன்றிரவு ஜீவிப்பாரெனில், அவருடைய ஆவியானது இங்கே இருக்கின்றது, அவர் என்ன செய்தாரோ அதை நாமும் கூட செய்வோம் என்று வாக்குத்தத்தம் செய்தார், சாயங்கால நேர வெளிச்சம் இங்கே இருக்கும் என்று அவர் வாக்குரைத்திருக் கின்றார், வேதாகமத்தின் எல்லா வாக்குத்தத்தங்களும் ... விஞ்ஞானமும் கூட “இது நள்ளிரவின் நேரம், அது தாக்கப் போகின்றது" என்று கூறுவதை நாம் காண்கையில் ..... வேதாகமம் கூட கர்த்தருடைய வருகைக்கான ஒவ்வொரு அடையாளக் கம்பத்தையும் சுட்டிக் காண்பித்துக் கொண்டிருக்கையில், சபையும் மிகவும் குளிர்ந்து போய் சடங்காச்சாரமான ஒன்றாக ஆகி, “தேவ பக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கின்றன,'' என்ற வேதாகமம் கூறியுள்ள எல்லா அடையாளங்களும் ... மேலும் இதோ, மேசியாவின் அடையாளமும் இங்கே சரியாக நேராக மறுபடியுமாக நம் மத்தியில் விழுந்து கொண்டிருக்கிறதே. நாம் எல்லாக் காரியங்களையும் காண்பதில்லை. ஆனால் நம்மால் இயேசுவைக் காணமுடிகின்றது.  95. இன்றிரவு இங்கே கட்டிடத்தில் இருக்கின்ற நீங்கள் ஒவ்வொருவரும் அதைக் குறித்து சிந்தித்து மற்றும் நீங்கள் அதைக் காணும்படி நான் ஜெபிக்கின்றேன். . . தேவன் உங்களுக்கு எதையாகிலும் வெளிப்படுத்துவாரானால் அதை விசுவாசியுங்கள், அதற்கு செவிகொடுங்கள், “ஓ, தேவனாகிய கர்த்தாவே, என்னுள் இருக்கின்ற எல்லாவற்றையும் கொண்டு நான் விசுவாசிக்கின்றேன்! நீர்தாமே... நான் விசுவாசிக்கிறேன். நீர் என்னுடன் பேசும்” என்று கூறுங்கள். தேவன் தாமே இன்றிரவு இந்த மக்கள் கூட்டத்தில் பேசி தாம் தான் மேசியா என்று தம்மை காண்பிப்பாரானால் அப்பொழுது அதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா? என் மகன் அல்லது ஜீன் அல்லது லீயோ அல்லது யாராயிருந்தாலும் இரண்டு அல்லது மூன்று இரவுகளாக ஜெப அட்டைகளை வினியோகிக்கவில்லை, ஆனால் இப்பொழுது நீங்கள் ஜெபியுங்கள்.  96. கர்த்தாவே, இன்றிரவு அளிக்கப்பட்ட சரியான சொற்கள் பொருத்தப்படாத இந்த சிறிய செய்தியானது .... ஏனென்றால் நான் இங்கே நடுக்கத்தோடு செயலாற்றி ... ஒரு எழுப்புதல் வெடித்தெழும்படிக்கு செய்யத்தக்கதாக ஏதோ ஒன்றை அறிந்து கொள்ளச் செய்யும்படிக்கு முயற்சி செய்தேன். கர்த்தாவே, என்னால் அந்த காரியத்தை சரியாக கண்டு பிடிக்காமல் இருப்பது போல் உள்ளது. மக்களால் அதனுள்ளாக இன்னுமாக செல்ல முடியாதபடிக்கு உள்ளது போலக் காணப்படுகின்றது. வார்த்தையானது புறப்பட்டுச் செல்கின்றது. ஆவியானவர் இங்கே உள்ளார் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன். கர்த்தாவே, நாங்கள் ஜீவிக்கின்ற இந்த மணி நேரமானது என்னவாயுள்ளது? இது எந்த ஒரு உணர்வும் இல்லாமல் மரத்துப் போயுள்ள ஒரு மணி நேரமா? உலகத்தின் காரியங்களும் மற்றும் தாங்கள் கேட்டிருக்கக்கூடாத எல்லா விதமான காரியங்களும் சபைக்கு தாலாட்டுப் பாடி அதை உறங்கச் செய்திருக்கின்ற ஒரு மணி நேரமா? கர்த்தாவே, அந்த மணி நேரம் இங்கே இருக்கின்றதா?  97. ஓ, பிதாவாகிய தேவனே, சூரியனானது காலையில் உதிக்கும் என்று எப்படி நான் அறிந்து கொள்வேன்? எனக்குத் தெரியவில்லை, ஆனாலும் கர்த்தாவே, இன்றிரவு ஒரு விசை மாத்திரம் இந்த ஜனக்கூட்டத்தின் மேல் நீர்தாமே ஊற்றப்பட வேண்டும் என்று நான் ஜெபிக்கின்றேன். கர்த்தாவே, நீர்தாமே பேசும், என்னுடைய சத்தம் போதுமானதல்ல, ஆனால் நான் கொண்டிருக்கிறதைக் கொண்டு உம்மிடமாக சரணடைகிறேன். ஏனென்றால் நீர் தாமே சரீரப்பிரகாரமாக இங்கே வரமுடியாது என்று நான் உணர்கிறேன். ஏனென்றால் நீர் வரும் போது அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் எல்லோரும் உயிரோடெழுவார்கள். அப்பொழுது இனிமேல் காலம் என்பது இருக்காது. ஆனால் நீர் தாமே எங்கள் சரீரங்களுக்குள்ளாக உள்ளே செல்லவும் வெளியே வரவும், கிரியைகளைச் செய்யவும் உம்முடைய அடையாளங்களையும் அற்புதங்களை செய்யவும் அதனாலே மக்கள் இரட்சிக்கப்படும்படிக்கு, உம்முடைய வாக்குத்தத்தத்தின்படியே பரிசுத்த ஆவியை அனுப்பியுள்ளீர்.  98. நீர் அதைச் செய்ய வேண்டும் என்பதற்காக நீர் செய்வதில்லை. நீர் ஏன் செய்கின்றீர்? உம்முடைய வார்த்தை நிறைவேறிக்கொண்டிருப்பதால் நீர் செய்கின்றீர், கர்த்தாவே நீர் அதை வாக்குத்தத்தம் செய்திருக்கிறீர். அது தாமே இன்றிரவு இன்னும் ஒரு விசை இருக்க வேண்டும் என்று நான் ஜெபிக்கின்றேன். பிறகு நான் இந்த ஜனக்கூட்டத்தை உம்மிடமாக திருப்புகிறேன். பிறகு நாங்கள் மறுபடியுமாக சந்திக்காமல் போனால், கர்த்தாவே, அது இவர்களுக்கும் உமக்கும் இடையே இருக்கின்ற ஒன்றாகும். நாங்கள் செய்துள்ள எல்லா காரியத்தையும் நீர் தாமே ஏற்றுக் கொள்ளும் ; தங்கள் கரங்களை உயர்த்தினவர்களையும், மற்றவர்களையும் ஆசீர்வதியும். அவர்கள் தாமே இரட்சிக்கப்பட ஏதுவாக இருக்கும். இதை நாங்கள் இயேசுவின் நாமத்தில் கேட்கின்றோம். ஆமென்.  99. நான் உங்கள் சிதறாத கவனத்தை இந்நேரத்தில் கோருகின்றேன். இப்பொழுது, இந்த விதத்திலாவது அல்லது அந்த விதத்திலாவது ஏதாவது ஒரு விதத்தில் நிரூபிக்கப்பட வேண்டிய காரியமானது இங்கே இருக்கின்றது. இது சரியாக இருக்க வேண்டும். அல்லது தவறாகயிருக்கவேண்டும். இப்பொழுது, எனக்குத் தெரிந்தவரையில் இந்த ஜனக்கூட்டத்தில் இருக்கின்ற ஒருவரைக் கூட எனக்குத் தெரியாது. இன்றிரவு இந்த ஜனக்கூட்டத்தில் எனக்கு தெரிந்த ஒருவரைக்கூட என்னால் காணமுடியவில்லை. எத்தனைப் பேர் எனக்கு அந்நியராக இருக்கின்றீர்கள். உங்கள் கரங்களை சற்று உயர்த்துங்கள். எல்லா இடத்திலும் உயர்த்தப்பட்டுள்ளன; எனக்கு உங்களைத் தெரியாது என்பதை அறிந்து கொள்ளுங்கள். நாம் ஒருவருக்கொருவர் அறிமுகமில்லாதவர்கள், உங்கள் கரத்தை உயர்த்துங்கள். மாற்கு 9:23  100. இப்பொழுது, வியாதிப்பட்ட மக்களாகிய நீங்கள் ஜெபித்து உங்களுக்குள் இருக்கின்ற எல்லாவற்றையும் கொண்டு தேவனை விசுவாசியுங்கள். அப்பொழுது தேவன் நிச்சயமாக ஏதாவதொன்றை உங்களுக்குச் செய்வார். "நீ விசுவாசிக்கக்கூடுமானால் ஆகும், எல்லாம் கூடும்” மாற்கு 5:27, 30 லூக்கா 8:44, 45 எபிரெயர் 4:15  101. அவர் செய்வார் என்று நான் கூறவில்லை . இந்த விதமாகப் பிரசங்கிப்பது உங்களை சற்று அசைத்து . . . தேவன் சுயாதிபத்தியம் கொண்டவர், அவர் சர்வ வல்லமையுள்ளவர், அவர் நீதியுள்ளவர், அவர் துவக்கமும் முடிவும் இல்லாதவர். இப்பொழுது, நீங்கள் “சகோதரன் பிரன்ஹாம் நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?” என்று கூறலாம். அங்கே உள்ள மக்களாகிய உங்களில் சிலர் அந்த மகா பிரதான ஆசாரியரை தொட வேண்டுமென்று நான் காத்துக் கொண்டிருக்கிறேன். உங்களைப் போல நானும் கூட இருப்பதிலேயே செய்வதறியாமல் திகைத்துக் கொண்டிருக்கின்ற ஒருவனைப் போலவே நின்று கொண்டிருக்கிறேன். இயேசு இங்கே பூமியில் இருந்த போது ஒரு ஸ்திரீ அவருடைய வஸ்திரத்தைத் தொட்டாள். அப்பொழுது அவர் உடனடியாகத் திரும்பி "என்னைத் தொட்டது யார்?” என்று கேட்டார். இந்த விதமான ஜனக்கூட்ட அளவை ஒருக்கால் அவர் நோக்கிப் பார்த்திருப்பார். பார்த்து அந்த ஸ்திரீயைக் கண்டு, அவள் விசுவாசித்ததினால் தான் அவளுடைய உதிரத்தின் ஊரல் நின்று போனது என்று அவளிடம் கூறினார். அவர் நம்முடைய பலவீனங்களைக் குறித்து பரிதபிக்கக்கூடிய மகா பிரதான ஆசாரியராக இப்பொழுது இருக்கிறார் என்று வேதம் கூறுகிறது. ஏசாயா 53:5, யோவான் 19:30  102. என்னால் உங்களைச் சுகப்படுத்த முடியாது. சரியாக இங்கே இயேசு நின்று கொண்டிருப்பாரானால், அவராலும் உங்களைக் குணமாக்க முடியாது. நீங்கள் ஏற்கெனவே குணமாக்கப்பட்டு விட்டீர்கள். இயேசு சிலுவையில் மரித்த போது "அது முடிந்தது” என்று கூறினார். எது? “நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டார் ; அவருடைய தழும்புகளால் நீங்கள் குணமானீர்கள்.” கிரியையானது முற்றிலுமாக செய்யப்பட்டாயிற்று. அது ஏற்கெனவே செய்து முடிக்கப்பட்ட கிரியையில் நீங்கள் வைக்கும் உங்கள் விசுவாசமாகும். வார்த்தை போதுமானதாக இருக்க வேண்டும். நான் உங்கள் வார்த்தையை நான் விசுவாசிக்காவிடில் நீங்கள், “அவனை விட்டு விடு” என்று கூறுவீர்கள். உங்களைக் குறித்த அதே காரியத்தை நான் ஒருக்கால் கூறலாம், ஆனால் தேவன் அவ்விதமாக கூறமாட்டார். தேவன் அவ்விதமானவரல்ல. அவர் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து தம்முடைய வரங்களையும் மற்றவற்றையும் அனுப்புகிறார்.  103. சரியாக அங்கே பின்புறத்தில் இந்த மூலையில் நான் ஒரு மனிதனைக் காண்கிறேன். அவரை எனக்குத் தெரியாது ; எனக்குத் தெரிந்த வரையில் அவரை என் வாழ்க்கையில் நான் கண்டதேயில்லை, அவர் சைனஸ் தொல்லையினால் அவதியுறுகிறார். அவருடைய கட்டை விரலில் ஏதோ ஒரு கோளாறு உள்ளது. திரு. காப், எழுந்து நில்லுங்கள். ஐயா, நிங்கள் அதை விசுவாசிப்பீரானால், இயேசு கிறிஸ்து உங்களை சுகமாக்குகிறார். என் வாழ்க்கையில் அவரை இதற்கு முன் கண்டதேயில்லை ; அவர் எனக்கு முற்றிலும் அந்நியர் ஆவார். அந்த மனிதனை எனக்குத் தெரியாது. ஆனால் இயேசு கிறிஸ்து அவரை அறிவார். அவர் அற்புதமானவரல்லவா?  104. இங்கே ஒரு பெண் உட்கார்ந்து நேராக என்னை நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஜெபிக்கின்றார்கள். “தேவனே என் மேல் இரக்கமாயிரும்” என்று கூறிக்கொண்டிருக்கிறார்கள். அப்பெண் மூட்டு வீக்கத்தினால் அவதியுறு கிறார்கள். அது சரி. நீங்கள் “ஓ இயேசுவே, அவர் என்னை பெயர் சொல்லி அழைக்கட்டும்” என்று ஜெபித்துக் கொண்டிருந்தீர்கள். அது சரியென்றால், உங்களை நான் அறியேன், என் வாழ்க்கையில் உங்களை நான் கண்டதேயில்லை. நீங்கள் யார் என்று தேவன் அறிந்திருக்கிறார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? திருமதி. ஹாய்ஸ்ட், நீங்கள் இப்பொழுது சுகமடைந்து வீடு செல்லலாம். நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? சரி ஐயா.  105. உங்களுக்கு அடுத்ததாக உட்கார்ந்திருக்கும் பெண் அதைக்குறித்து மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். ஏனென்றால் அவர்களுக்கும் இயற்கைக்கு மாறாக நரம்புகள் எப்பொழுது வீங்கிக்கிடக்கின்ற (varicoseveins) தொல்லையிலிருந்து சுகமாக்கப்பட விரும்புகிறார்கள். பெண்ணே , அது சரி தானே? அப்படியானால் உங்கள் கரத்தை சற்று உயர்த்துங்கள். சரி, உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள், அப்பொழுது நீங்கள் எதைக் கேட்கிறீர்களோ அதை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.  106. அந்த ஜனங்களை எனக்குத் தெரியாது. ஜனங்களாகிய உங்களுக்கு நான் முன் பின் அறிமுகமில்லாதவன் என்றால் உங்கள் கரங்களை உயர்த்துங்கள். அது சரி, அது என்னவென்று பாருங்கள்? அவர்கள் பிரதான ஆசாரியரைத் தொடுகிறார்கள். அவர்கள் தொடுவது .... ஒரு நிமிடத்திற்கு முன்னர் ஒரு மூன்றாவது கரமானது உயர்த்தப்படுவதை நான் கண்டேன், அப்பெண்ணிற்கு அடுத்ததாக உட்கார்ந்திருக்கும் பெண் என்று நான் நம்புகிறேன். சகோதரியே, ஏதாவது ஒரு தேவைக்காக உங்கள் கரத்தை உயர்த்தியுள்ளீர்களா? உங்களுக்கு இருக்கும் கோளாறு என்ன என்று தேவனுக்குத் தெரியும் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அதோ அங்கே உட்கார்ந்திருக்கும் பெண்ணிற்கு மூளையில் காயம் ஏற்பட்டுள்ளது. அது சரியே. உங்களுக்கு என்னைத் தெரியாது. அது சரிதான் என்றால் உங்கள் கரத்தை இந்த விதமாக அசைத்துக்காட்டுங்கள். அக்காயமானது ஒரு வாகன விபத்தினால் ஏற்பட்ட ஒன்றாகும். அது சரியென்றால் உங்கள் கரத்தை எழுப்பு... உங்கள் கரத்தை இந்த விதமாக அசைத்துக் காட்டுங்கள். அது சரி, எல்லாம் இப்பொழுது முடிந்து விட்டது. நீங்கள் சுகமடைந்து வீடு செல்லலாம். என்ன நடந்தது?  107. இங்கே ஒரு மனிதன் உட்கார்ந்து ஜெபித்துக் கொண்டிருக்கின்றார். அவருக்கு கொப்புளப் புண்கள் உண்டாகும் ஒரு வகை தோல் வியாதியைக் கொண்டிருக் கின்றார். ஐயா உங்களை எனக்குத் தெரியாது, அப்படித்தானே? நாம் முன் பின் அறிமுகமில்லாதவர்கள், அது சரி தானே? உங்கள் கரத்தை உயர்த்துங்கள். நீங்கள் யார் என்று தேவன் எனக்குக் கூறுவாரானால் அப்பொழுது நீங்கள் என்னை விசுவாசிப்பீர்களா? அது சரி, திரு. ஹீயுக்ஸ், நீங்கள் வீடு சென்று சுகமடைவீர்களாக. அது சரியே, ஐயா, அது சரி. தேவனில் விசுவாசம் வையுங்கள்! சந்தேகப்படாதீர்கள்! எல்லாக் காரியங்களையும் நாம் காண்பதில்லை, ஆனால் நாம் இயேசுவைக் காண்கிறோம். II இராஜாக்கள் 7:3,4  108. இரட்சிக்கப்பட வேண்டுமென்று இங்கே தன்னுடைய கரத்தை மேலே உயர்த்திய ஒரு வயதான நபர் யார்? அதோ அங்கே சக்கர நாற்காலியில் இருப்பவர். சகோதரனே, தேவன் உங்களை அறிந்திருக்கிறார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? உங்களை எனக்குத் தெரியாது. ஜெப அட்டைவைத்துள்ளீர்களா? உங்களிடம் இல்லையா? சரி, உங்களுக்கு இருக்கும் கோளாறு என்ன என்று தேவனால் என்னிடமாகக் கூறமுடியும் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அப்படி அவர் கூறுவாரென்றால் அவர் உங்களை சுகப்படுத்த விரும்புகிறார் என்று நீங்கள் விசுவாசிப்பீர்களா? நீங்கள் மரண நிழலால் மூடப் பட்டுள்ளீர்கள் ; அது உங்கள் நுரையீரலில் இருக்கின்ற புற்றுநோயாகும். தேவன் உங்களை சுகப்படுத்துவார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் அப்படி விசுவாசிக்கிறீர்களா? நான் உங்களுடைய நிலையிலிருந்தால் நான் என்ன செய்வேன் என்று உங்களுக்குத் தெரியுமா? ஒரு சமயத்தில் வாசலில் சில குஷ்டரோகிகள் உட்கார்ந்திருந்தனர், அப்பொழுது அவர்கள், "நாம் இங்கே இருந்து சாகவேண்டியது என்ன? நாம் எழுந்துச் சென்று எதையாவது ஒன்றைச் செய்வோமாக. இங்கேயே நாம் உட்கார்ந்திருந்தால் மரிக்கத் தான் போகிறோம். நாம் பட்டணத்திற்குள் போவோ மென்றாலும் அங்கேயும் மக்கள் செத்துக் கொண்டிருக் கிறார்கள். ஆகவே நமக்கு எந்த ஒரு சந்தர்ப்பமும் இல்லை. நாம் இராணுவ முகாமிற்கு சென்றால் ஒரு வேளை அவர்கள் நம்மை உயிரோடே வைப்பார்கள்” என்று கூறினர். அந்த சக்கர நாற்காலியில் உட்கார்ந்திருக்கும் நிலையில் நீங்கள் மரிக்கத்தான் போகிறீர்கள். இப்பொழுது இயேசு கிறிஸ்து மாத்திரம் தான் உங்களுக்கு இருக்கின்ற ஒரே நம்பிக்கையாகும். அது சரி. ஏன்? உங்களால் அங்கிருந்து எழுந்திருக்க முடியாதா? நீங்கள் நின்று உங்கள் சக்கர நாற்காலியை எடுத்துக் கொண்டு வீடு சென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் சுகமடையுங்கள்.  109. நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? உங்களில் ஒவ்வொருவரும் விசுவாசிக்கிறீர்களா? அப்படியானால் எழுந்து நில்லுங்கள், உங்களுக்கு எந்தவிதமான கோளாறு இருந்தாலும் எனக்கு அதைக்குறித்து கவலையில்லை, எழுந்து நில்லுங்கள், தேவனை விசுவாசியுங்கள். இந்த நேரத்தில் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள விரும்புகிற எல்லாரும் எழுந்து நில்லுங்கள். எல்லா இடங்களிலும் உள்ளவர்களும் நீங்கள் விரும்பினால் எழுந்து நில்லுங்கள். இப்பொழுது தேவனைத் துதித்து உங்கள் கரங்களை உயர்த்துங்கள். உங்கள் கரங்களை உயர்த்துங்கள். அவரை விசுவாசியுங்கள்! இதோ சக்கர நாற்காலியில் இருந்த அந்த மனிதன் எழுந்து வருகின்றார் ! பாருங்கள். நாம் "கர்த்தருக்கு ஸ்தோத்திரம்” என்று சொல்வோமாக, எல்லோரும் சொல்வோம். எழுந்து நில்லுங்கள்! நீங்கள் எந்த வித விசுவாசத்தில் இருந்தாலும் பரவாயில்லை.  110. ஓ கர்த்தராகிய தேவனே, நாங்கள் காணக்கூடாததை நோக்கிப் பார்க்கிறோம் ; இப்பொழுது, நீர் தேவனுடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்து என்று நாங்கள் விசுவாசிக்கிறோம். ஒவ்வொரு பிசாசின் ஆவியையும், சந்தேகத்தையும் நாங்கள் கடிந்து கொள்கிறோம். அவர்கள் தாமே இன்றிரவு காணக்கூடாததின் படி நடப்பார்களாக. கர்த்தாவே, இதை அருளும். தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் இதைக் கேட்கின்றோம்.  111. உங்கள் முழு இருதயத்தோடும் அவரைத் துதியுங்கள், உங்கள் நாற்காலியிலிருந்து எழுந்து கொள்ளுங்கள். எல்லா இடங்களிலும் இருப்பவர்கள் எழுந்து கொள்ளுங்கள். நீங்கள் ஆரோக்கியமடைந்து இயேசுவின் நாமத்தில் சுகமடையுங்கள். சகோதரனே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, அங்கேயிருந்து வெளியே வந்து வீடு செல்லுங்கள். நீங்கள் சுகமடைகிறீர்கள்.  112. நீங்கள் நின்று தேவனை துதித்துக் கொண்டிருக்கையில் எத்தனைப் பேர்களுக்கு ... உங்களுடைய ஆத்துமாவின் இரட்சிப்புக்காக தேவன் என்னுடைய ஜெபத்தைக் கேட்பார் என்று விசுவாசித்து சற்று முன்னர் உங்களுடைய கரங்களை நீங்கள் தானே உயர்த்தினீர்களல்லவா? “நான் அவரைத் துதிப்பேன், நான் அவரைத் துதிப்பேன்” என்று நாங்கள் பாடுகையில் நீங்கள் இங்கே இப்பொழுது நடந்து வாருங்கள். வாருங்கள், நேராக இயேசுவை ஏற்றுக்கொள்ள இந்த முன்னிருக்கைகளைத் தாண்டி இங்கே இப்பொழுது வாருங்கள். உங்கள் கரங்களை மேலே உயர்த்தியிருங்கள். காணக்கூடாததை நோக்கிப் பார்த்துக் கொண்டிருங்கள், உங்கள் இருதயத்தில் அந்த சிறு துடிப்பானது இருக்கட்டும். வந்து கொண்டேயிருங்கள். அவர் உங்கள் இருதயத் துடிப்பாக இருக்கின்றாரா? "கல்லறையிலிருந்து கிறிஸ்துவை உயிரோடெழுப்பின கர்த்தர் நானே. பரிசுத்த ஆவியை அனுப்பினது நான் தான். நான் தான் வாக்குத்தத்தத்தை அளித்தவராவேன். இந்த காரியத்தில் சகோதரன் பிரன்ஹாமிற்கு எந்த ஒரு பங்கும் இல்லை. அவர் தன்னுடைய ஜீவியத்தை என்னிடமாக சரணடைய மாத்திரமே செய்துள்ளார் ; நான் அவருடைய ஆவியை உபயோகிக்கின்றேன் ; நான் அவருடைய உதடுகளின் மூலமாகப் பேசுகின்றேன். அது நானே, நான் கர்த்தர், "இங்கே வாருங்கள். நாங்கள் பாடுகையில் எல்லாரும் சரியாக இங்கே வாருங்கள். நான் அவரைத் துதிப்பேன், நான் அவரைத் துதிப்பேன் பாவிகளுக்காக அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவருக்கு ஸ்தோத்திரம். (வாருங்கள் எல்லாரும் முன்னே வாருங்கள்) ஜனங்களாகிய எல்லாரும் அவருக்கு மகிமையை அளியுங்கள்.  113. கர்த்தருக்கு நன்றி. அதோ அந்த மனிதன் தன்னுடைய சக்கர நாற்காலியை விட்டு எழுந்து நடக்கின்றார், சில நிமிடங்களுக்கு முன்னர் இரட்சிக்கப்பட்டார், நித்திய ஜீவன் அளிக்கப்பெற்றார் ; தேவனுடைய வல்லமையால் சுகமாக்கப் பட்டு நடந்து செல்கின்றார். அவருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம். நான் அவரைத்துதிப்பேன், (இப்பொழுது நேராக வாருங்கள், அந்த துடிப்பை உங்கள் இருதயங்களில் உணருகிறீர்களா?) பாவிகளுக்காக அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவருக்கு ஸ்தோத்திரம். ஜனங்களாகிய எல்லாரும் அவருக்கு மகிமையை அளியுங்கள். அவருடைய இரத்தம் ஒவ்வொரு கரையையும் கழுவினது. 114. அதைக்குறித்து சற்று சிந்தியுங்கள்; அந்த பரிதாபத்திற்குரிய மனிதன் அங்கே நின்று சற்று முன்னர் ஒரு பாவியாக தன்னுடைய கரத்தை உயர்த்திக் கொண்டிருந்தார். ஒரு கறுத்த நிழல் அவரின் மீது அசைந்தது. அவர் மரித்துக் கொண்டிருந்தார்; அவர்கிறிஸ்துவை பெற்றுக்கொண்ட மாத்திரத்தில் அவருடைய இருதயமானது அந்த துடிப்பினால் திறந்தது. என்ன நடந்தது? பரிசுத்த ஆவியானவர் உள்ளே வந்த போது அவர் விசுவாசிக்க ஆரம்பித்தார். ஏனென்றால் அவர் அப்பொழுது தான் அவரை தன்னுடைய இருதயத்தில் ஏற்றுக்கொண்டார். அதோ அவர் இப்பொழுது தன்னுடைய பாதையில் நின்று கொண்டிருக்கின்றார். நித்திய ஜீவனைப் பெற்றுக்கொண்டார், சரீரப்பிரகாரமாக முழுவதுமாக சுகமாக்கப்படப்போகின்றார், இருளிலிருந்து ஒளிக்குள்ளாக, மரணத்திலிருந்து ஜீவனுக்குள்ளாக கொண்டு வரப்பட்டுள்ளார்.  115. ஓ, அவர் இங்கே இருக்கின்றார் என்கின்ற அத்தாட்சிகள் எல்லாமே இருக்கையில், அப்படிப்பட்ட ஒரு இரட்சகரை நீங்கள் எப்படி வேண்டாமென்று புறக்கணித்துத் தள்ள முடியும்? வா, பாவியான நண்பனே, பின்மாற்றமடைந்தவனே வா, வெட்கப்படாதே. அங்கே நீ இன்னுமாக வெட்கப்படுவாய், இப்பொழுதே வா, நீ வரமாட்டாயா? அவர்கள் இப்பொழுது காத்துக் கொண்டிருக்கையில்வா, நீவருவதற்காக தருணத்தையும் நேரத்தையும் உனக்குத் தருகிறோம். ஒவ்வொரு ஆத்துமாவும் இப்பொழுது வாருங்கள். அவரை துதித்துக் கொண்டு வாருங்கள்.  116. தேவனுடன் சரியாக இல்லாதிருக்கின்ற எத்தனைப் பேர் இங்கே இருக்கிறீர்கள், அதோ அங்கே, உங்கள் கரத்தை உயர்த்துங்கள். அந்த விதமாக உத்தமமாக இருங்கள். நீங்கள் தேவனோடு சரியாக இல்லையென்று உங்களுக்குத் தெரியும். அவர் உங்களுடைய இருதயத்தை அறிந்திருக்கிறார். பெண்ணே , நீங்கள் அந்த விதமாக உத்தமமாக இருப்பதற்கு உங்களுக்கு நன்றி. ஐயா, நீங்கள் உத்தமமாக இருப்பதற்கு நன்றி. உங்களுக்கு நன்றி. உங்களுக்கு நன்றி. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அங்கே உள்ள உங்களை தேவன் ஆசீர்வதிப்பாராக. அங்கே மாடி இருக்கைகளில் உள்ளவர்கள் தேவனுடன் சரியாக இல்லாதிருந்தால், உங்கள் கரங்களை உயர்த்துங்கள், நீங்கள் உத்தமமாக இருந்து, “நான் சரியில்லை என்பது எனக்குத் தெரியும். முன்னே வருவதற்கான தைரியம் எனக்கு இல்லை, ஆனால் நான் சரியாக இல்லை என்று எனக்குத் தெரியும்” என்று கூறுங்கள். உங்கள் கரங்களை உயர்த்துங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. அது அருமையானது. அங்கே இருப்பவர்கள், கர்த்தர் உங்களை அறிவார். அது அருமையானது. நேராக இங்கே கீழே வாருங்கள். யோவான் 3:3,5  117. இங்குள்ள எத்தனைப் பேர் பரிசுத்த ஆவியைப் பெற்றிராதவர்கள், இப்பொழுது பரிசுத்த ஆவியைப் பெற வேண்டும் என்று விரும்புகிறீர்கள்? நீங்கள் இங்கே வாருங்கள். இங்கே முன்னே வாருங்கள். இதுவே பரிசுத்த ஆவியை பெற்றுக்கொள்வதற்கான நேரமாகும். “ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தை அவனால் புரிந்துக் கொள்ளவே முடியாது” அதைக்குறித்து சற்று சிந்தித்துப் பாருங்கள். நான் இன்னும் ஒரு முறை பாடலைப் பாடும் போது சரியாக இப்பொழுதே வாருங்கள். நான் அவரைத்துதிப்பேன், (இப்பொழுது நேராக வாருங்கள், அவருக்கு துதியை செலுத்துங்கள். அதை பற்றிக் கொள்ளுங்கள்) நான் அவரைத் துதிப்பேன். பாவிகளுக்காக அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவருக்கு ஸ்தோத்திரம். ஜனங்களாகிய எல்லாரும் அவருக்கு மகிமையை அளியுங்கள். அவருடைய இரத்தம் ஒவ்வொரு கரையையும் கழுவினது. நான் அவரைத் துதிப்பேன், (தேவனே, எனக்கு சுவாசம் இருக்கும் வரைக்கும் என் சரியான மன நிலைமையிலும் ) நான் அவரைத் துதிப்பேன். பாவிகளுக்காக அடிக்கப்பட்ட ஆட்டுக் குட்டியானவருக்கு ஸ்தோத்திரம். ஜனங்களாகிய எல்லாரும் அவருக்கு மகிமையை அளியுங்கள். அவருடைய இரத்தத்தால் ஒவ்வொரு கரையையும் கழுவ முடியும்.  118. இப்பொழுது சபையின் மேலாக அந்த உண்மையான பரிசுத்த உணர்வானது வந்துக் கொண்டிருப்பதை உங்களால் உணர முடிகின்றதா? எத்தனைப் பேர் அதற்கு சாட்சிகளாக உள்ளீர்கள்? அது என்னவாயிருக்கிறது? அது தான் இந்த தங்கள் தவறுக்காக வருந்திக்கொண்டிருக்கின்ற இந்த பாவிகளைச் சுற்றி இருக்கின்ற பரிசுத்த ஆவியாகும். பாருங்கள்? அது இரட்சிப்பாகும். அவர்கள் இப்பொழுது புதிய வாழ்விற்குள்ளாகச் சென்று கொண்டிருக்கிறார்கள். ஓ, நாம் தாமே நம்முடைய தலைகளை மிக பயபக்தியுடன் தாழ்த்தி மற்றவர்கள் முன்னே வந்து கொண்டிருக்கையில் அமைதியாக பாடிக்கொண்டிருக்க வேண்டியவர்களாக உள்ளோம். நான் அவரைத்துதிப்பேன், நான் அவரைத்துதிப்பேன்.. பாவிகளுக்காக அடிக்கப்பட்ட ஆட்டுக் குட்டியானவருக்கு ஸ்தோத்திரம். ஜனங்களாகிய எல்லாரும் அவருக்கு மகிமையை அளியுங்கள். அவருடைய இரத்தத்தால் ஒவ்வொரு கரையையும் கழுவ முடியும். நேசிக்கின்றேன், (இப்பொழுது பயபக்தியுடன்) ..... நேசிக்கின்றேன். முந்தி அவர்... (கிறிஸ்தவனே, அதைப் பாடு) சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி மரத்தில் (ஓ, நாம் அதை எவ்வளவாகப் பாட வேண்டியவர்களாக இருக்கிறோம்). நேசி... (உலகத்தினின்று உங்களை அகற்றிக் கொள்ளுங்கள், உங்கள் புலன்களை அப்புறப்படுத்துங்கள். ஆவியானவர் தாமே உள்ளே வரும்படிக்குச் செய்யுங்கள்) நேசி... (அது ஆவியானவரின் அசைவாகும்) முந்தி அவர் நேசித்ததால் சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி மரத்தில் (சகோதரன் பிரன்ஹாம் வாய் மூடி மெதுவாக பாடலை இசைக்கின்றார்), ஓ ஆவியின் இனிமை. அதில் அப்படியே நான் மூழ்குவதில் எனக்கு மிகவும் விருப்பம். அவருடைய நாமம் ஸ்தோத்தரிக்கப்படுவதாக. தேவனுக்கு ஸ்தோத்திரம், தேவனுக்கு ஸ்தோத்திரம். சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி மரத்தில் யோவான் 6:40,44  119. இயேசு முழுவதிற்கும் கிரயத்தைச் செலுத்தின சிலுவையண்டை நீங்கள் வருகின்றீர்கள். நீங்கள் வரவேற்கப் படுகின்ற ஒரு இடத்திற்குத் தான் வந்துக் கொண்டிருக் கின்றீர்கள். நீங்கள் திரும்பிச் செல்ல வேண்டுமென்று எதிர்ப்பார்க்கப்படவில்லை. ஆனால் நீங்கள் சிலுவையண்டைக்கு வரவேற்கப்படுகிறீர்கள். நினைவில் கொள்ளுங்கள், இயேசு ‘என் பிதா ஒருவனை இழுத்துக் கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்” என்று கூறினார். தேவன் தான் உன்னை இது வரைக்கும் இழுத்துள்ளார். “என்னிடத்தில் வருகிறவர்கள் எவர்களோ அவர்களுக்கு நித்திய ஜீவனை அளித்து அவனைக் கடைசி நாளில் எழுப்புவேன்.'' “தேவனுடைய நித்திய ஆவி தாமே இங்கே நித்திய ஜீவனை அளித்துக் கொண்டிருக்கின்றது''. நேசிக்கின்றேன், (ஓ, நண்பர்களே, அவரைத் தொழுது கொள்ளுங்கள்! செய்தி முடிந்து விட்டது. நாம் அவரை இப்பொழுது தொழுதுகொள்வோமாக) முந்தி அவர் நேசித்ததால் சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி ....  120. நண்பர்களே அதைக்குறித்து சற்று சிந்தித்துப் பாருங்கள். இப்பொழுது, பாவிகள் இங்கே பீடத்தைச் சுற்றிலுமாக மறுபடியும் பிறந்து கொண்டிருக்கையில் கிறிஸ்தவர்களாகிய நாம் நம்முடைய கரங்களை அமைதியாக உயர்த்தியிருக்கையில் ஆவியில் மறுபடியுமாக தொழுது கொண்டு நம்முடைய இருதயத்தில் பயபக்தியுடனே அவரை நோக்கிப் பாடுவோமாக. வாருங்கள். நேசிக்கிறேன், நேசிக்கிறேன் முந்தி அவர் நேசித்ததால் சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி மரத்தில்  121. இப்பொழுது, நாம் அதை மறுபடியுமாகப் பாடுகையில், மிக அமைதியுடனே கிறிஸ்தவர்கள் தாமே உங்களுக்கு பின்னால் இருக்கின்ற, உங்களுக்கு முன்னால் இருக்கின்ற மற்றும் உங்களுக்கு பக்கத்தில் இருக்கின்றவர்களுடனே கரத்தைக் குலுக்குவோமாக. நட்பு கொள்ளுங்கள். பாப்டிஸ்டுகள், மெத்தோடிஸ்டுகளாகிய நீங்கள் எல்லோரும், ஒவ்வொருவரும் ஒரு பெந்தெகொஸ்தேவுடன் கைகளைக் குலுக்குங்கள். பெந்தெகோஸ்தேயினரே அவர்களுடனே கைகளை நீங்கள் குலுக்குங்கள். நாம் எல்லோரும் ஒருவராவோம். நேசிக்கின்றேன் (அவ்வாறு தான்) நேசி... (இப்பொழுது உங்களுக்குள்ளாக முணு முணுப்புகள் இருக்குமாயின் இப்பொழுதே அதை சரி செய்து கொள்ளுங்கள்) முந்தி அவர் நேசித்ததால் சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி மரத்தில். 37